ஐபிஎல் தொடருக்கும் சூரத்திற்கும் உள்ள ‘உடை’க்க முடியாத பந்தம்!

Update: 2020-09-25 06:57 GMT

இந்தாண்டிற்கான ஐபிஎல் தொடர் யுஏஇயில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த முறை ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறவில்லை. எனினும் வெளிநாட்டில் நடைபெற்றாலும் இந்தாண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவின் சுயசார்புத் திட்டத்திற்கு ஆதரவை அளித்துள்ளது. அது எப்படி தெரியுமா?

இந்தியா அரசு எல்லை பிரச்னை காரணமாக சீனாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பல தடைகள் மற்றும் கட்டுபாடுகளை வித்தது. இந்தக் கட்டுபாட்டால் சில இந்திய நிறுவனங்கள் பயன் அடைந்தன. அதில் ஒன்று தான் சூரத் ஜவுளி நிறுவனம். இந்தாண்டு கொரோனா காரணமாக மிகவும் பாதிப்பை சந்தித்த சூரத் ஜவுளி நிறுவனங்களுக்கு ஐபிஎல் தொடர் ஒரு புத்துணர்வை தந்துள்ளது.

இந்த ஐபிஎல் தொடரில் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அணிந்து இருக்கும் அனைத்து உடைகளையும் சூரத் ஜவுளி நிறுவனங்கள் தயார் செய்துள்ளன. இதன்காரணமாக நலிவு அடைந்து கிடைத்த அந்த நிறுவனங்கள் சற்று நல்ல நிலைக்கு வந்துள்ளன.

நாடு முழுவதும் ஜவுளித்துறையின் உற்பத்தி 50 சதவிகிதமாக குறைந்துள்ள சூழலில் சூரத் ஜவுளித்துறை நிறுவனங்கள் மட்டும் 80 சதவிகிதம் உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றன. மேலும் சீனாவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பின்னலாடை 200 டன்னாக குறைக்கப்பட்டுள்ளதால், சூரத் பின்னலாடைகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

சூரத் ஜவுளி துறையை நம்பியுள்ள பல குடும்பங்களுக்கு ஐபிஎல் தொடர் ஒரு புதிய வெளிச்சத்தை தந்துள்ளது. விளையாட்டுன் சமூகம் சார்ந்த பல பிரச்னைகளை இந்த ஐபிஎல் தொடர் கவனிக்க வைத்து வருகிறது. அதில் ஒன்று தான் இந்த ஜவுளித் துறையின் புத்துணர்வு. அதேபோல மாதவிடாய் தொடர்பாக ராஜஸ்தான் அணியும், கொரோனா முன்கள பணியாளர்கள் தொடர்பாக பெங்களூரு அணியும் சமூக நலனை வலியுறுத்தி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ‘நான் கேகேஆர் அணிக்கு தேர்வாகியதை கேட்டவுடன் அழுதேன்’- ஐபிஎல் தொடரின் முதல் அமெரிக்க வீரர்