ஐபிஎல்: 'கிரிக்கெட் விளையாடுவதற்காக மட்டும் பிறந்தவன் இவன்'- படிக்கலின் தாய்

Update: 2020-10-03 15:03 GMT

"எங்களுக்கு பிறக்கும் இரண்டாவது குழந்தை பையனாக இருந்தால் அவரை கிரிக்கெட் வீரராக உருவாக்குவதாக முடிவு செய்திருந்தோம்" என கிரிக்பஸ் இணையத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார் அம்பிலி படிக்கல். இவர் தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் இளம் வீரரான தேவ்தத் படிக்கலின் தாயார் ஆகும். படிக்கல் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இந்த பெர்ஃபாமன்ஸ்கள் எதிர்பார்த்த விஷயம் தான். இன்றைய போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலம் இந்த சீசனில் மூன்று அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார் 20 வயதே ஆன தேவ்தத் படிக்கல்.

அவரது பெற்றோர்களின் ஒரே வருத்தம் தங்களது மகனின் அற்புதமான ஆட்டத்தினை நேரில் பார்க்க முடியவில்லை என்பது மட்டுமே. ஐபிஎல் பெங்களூரில் நடந்திருந்தால் நிச்சயம் அனைத்து போட்டிகளுக்கும் சென்றிருப்பேன் என அவரது தந்தை பாபுனு குன்னத் குறிப்பிட்டிருந்தார். இவர் விளையாடுவதை பார்க்க பார்க்க அனைவருக்கும் பிடிக்கும் என அவரது பயிற்சியாளர் மொகமது நஸ்ருதீன் கூறியிருந்தார். படிக்கலின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு இவருக்கு உள்ளது.

நிழற்படம்: ஐபிஎல்

விளையாடிய அனைத்து தொடர்களிலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியர் படிக்கல். கேபிஎல் தொடரில் தொடங்கிய இவரது அதிரடி ஆட்டம் தொடர்ந்து விஜய் ஹசாரே, சையது முஷ்டாக் அலி தொடர் என வெளுத்து வாங்கினார். நடுவில் இவரது ஆட்டத்தில் சிறிது தொய்வு இருந்தாலும் சிறப்பாக மீண்டு வந்தார்.

இவரது இந்த வளர்ச்சிக்கு இவரின் பெற்றோர் செய்த தியாகங்கள் மிக அதிகம். கேரளாவில் உள்ள இடப்பலினை பூர்வீகமாக கொண்ட இவர்கள் ஹைதராபாத்தில் உள்ள ஆர் கே புரத்தில் வாழ்ந்து வந்தனர். ஆனால் அங்கே தேவ்தத்தின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு சரியான வாய்ப்புகள் இல்லாததால் கடினமான முடிவெடுத்து பெங்களூர் வந்தனர். இதேபோல் எப்பொழுதும் அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். ஐபிஎல் தொடரில் விளையாடி தேர்வானதும், மேலும் பெங்களூர் அணிக்கு தேர்வானது அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிப்பதாகும். அனைவருக்கும் இவர் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்ப்பு இருந்தது, அவை அனைத்தையும் பூர்த்தி செய்யும் விதமாக தேவ்தத் மிகவும் அற்புதமாக விளையாடி வருகிறார். பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் தொடர்ந்து பாராட்டி வரும் நிலையில் இவர் மென்மேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என வாழ்த்துவோம்.

மேலும் படிக்க: இறுதி ஓவரில் தோனியின் அதிரடியை கட்டுப்படுத்திய இளைஞர் அப்துல் சமாத் – காஷ்மீரின் நம்பிக்கை நட்சத்திரம்