ஐபிஎல்: ட்விட்டரில் ரசிகர்களின் மரியாதையை பெற்ற ரானா, மன்தீப் சிங் - காரணம் என்ன?

Update: 2020-10-25 03:00 GMT

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் முதல் போட்டியில் கொல்கத்தா-டெல்லி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணியின் நிதிஷ் ரானா சிறப்பாக விளையாடினார். அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 81 ரன்கள் குவித்தார்.

எனினும் அவர் அரைசதம் கடந்தவுடன் அவர் செய்த ஒரு நிகழ்வு அனைவரிடமும் அவருக்கு பாராட்டை பெற்று தந்துள்ளது. அதாவது நிதிஷ் ரானாவின் மாமா நேற்று உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அரைசதம் கடந்தவுடன் அவரின் பெயர் உள்ள கொல்கத்த ஜெர்ஸியை ரானா முத்தமிட்டார். இது பலரையும் கவர்ந்தது. இதுதொடர்பாக பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

அதேபோல நேற்று இரண்டாவதாக நடைபெற்ற ஐபிஎல போட்டியில் பஞ்சாப்-ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரராக மன்தீப் சிங் களமிறங்கினார். அவர் வெறும் 17 ரன்கள் அடித்திருந்தாலும், இந்தப் போட்டியில் களமிறங்கி ரசிகர்களின் மரியாதையை பெற்றுள்ளார்.

ஏனென்றால் நேற்று முன்தினம் இரவு மன்தீப் சிங்கின் தந்தை உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் நேற்று நடைபெற்ற போட்டியில் களமிறங்கியுள்ளார். மேலும் பஞ்சாப் அணியின் வீரர்கள் அனைவரும் ஜெர்ஸியில் கருப்பு நிற பேட்ச் அணிந்து விளையாடினர். தந்தையை இழந்த பிறகும் ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய மன்தீப் சிங்கை ரசிகர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் மரியாதையை பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் படிக்க: ஒரே போட்டியில் 2 மெய்டன் வீசி அசத்திய ஆட்டோ ஓட்டுநரின் மகன் சிராஜ்!