ஐபிஎல்: ‘தல’ என்றால் அது ஒருவர் தான் - ரசிகைக்கு பதிலளித்த கே.எல்.ராகுல்

Update: 2020-10-19 12:01 GMT

ஐபிஎல் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 2 சூப்பர் ஓவர்கள் நடைபெற்ற போட்டியாக அப்போட்டி அமைந்தது. இந்தப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றிப் பெற்று அசத்தியது.

இந்நிலையில் இந்தப் போட்டியின் முதல் சூப்பர் ஓவரில் மும்பை அணியின் டிகாகை கடைசி பந்தில் விக்கெட் கீப்பர் ராகுல் சிறப்பாக ரன் அவுட் செய்வார். இதனால் தான் ஆட்டம் இரண்டாவது சூப்பர் ஓவருக்குச் சென்றது. கே.எல்.ராகுல் ரன் அவுட் செய்யும் புகைப்படத்தை ரசிகை ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், “என்னுடைய தல” என்ற வாசகத்தையும் பதிவிட்டிருந்தார். இதற்கு கே.எல்.ராகுல் பதில் ட்வீட் செய்துள்ளார். அதில், “கிரிக்கெட்டில் எப்போதும் ஒரே தல தான். அது யார் என்பது அனைவருக்கும் தெரியும்” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை தான் அனைவரும் செல்லமாக தல என்று அழைப்பார்கள். கே.எல்.ராகுலும் தனது பதிவின் மூலம் அதையே குறிப்பிடுகிறார். ராகுலின் இந்தப் பதிவு ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது.

மேலும் படிக்க: முருகன் அஸ்வினின் வாழ்க்கையை மாற்றிய ஜிஆர்இ தேர்வு!