ஐபிஎல்: பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாடவுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் அணியினர்

Update: 2020-10-25 06:38 GMT

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசனில் தங்களது 11ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியினர் தங்களது வழக்கமான சிவப்பு நிற ஜெர்சிக்கு பதிலாக பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாட உள்ளனர். அவர்களது பயிற்சியாளர்கள் குழுவும் இதில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட ப்ளேஃஆப்ஸ் சுற்றுக்கு ஆர்சிபி அணி தகுதி பெற்றுவிட்ட நிலையில் அடுத்த ஆட்டத்தில் தங்களது பரம எதிரியான சிஎஸ்கே அணியை எதிர்கொள்கிறார்கள். ஏற்கனவே அவர்களுடன் மோதிய முதல் போட்டியில் வெற்றி பெற்றதால் இந்த போட்டியிலும் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறார்கள் ஆர்சிபி அணியினர்.

முதல் முறையாக 2011ஆம் ஆண்டு 'கோ க்ரீன்' என்ற முயற்சியை ஆதரித்து இந்த பச்சை நிற ஜெர்சியை அணிந்து விளையாடினர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியினர். இது சுற்றுச்சூழலை பாதுகாக்க, கார்பன் உபயோகித்தை குறைப்பதற்காகவும் இந்த முயற்சியை தொடங்கினர்.

டி20‌‌ உலகில் கார்பன் உபயோகித்தை வெகுவாக குறைத்த முதன்மையான அணிகளில் ஆர்சிபி அணியும் ஒன்றாகும். இந்த ஐபிஎல் தொடரினை ஒரு மேடையாக பயன்படுத்தி ரசிகர்களிடையே வருங்காலத்திற்காக மின்சாரம், தண்ணீர் போன்றவற்றை சேமிப்பதும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதும் எவ்வளவு முக்கியம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்த முயல்கின்றனர். இதுகுறித்து தங்களது டிவிட்டர் பக்கத்தில், "சிஎஸ்கே அணிக்கெதிரான அடுத்த போட்டியில் உலகத்தை தூய்மையாகாவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த ஆர்சிபி அணி வீரர்கள் பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாடுவார்கள்". எனப் பதிவிட்டுள்ளனர்.

மேலும் படிக்க: ட்விட்டரில் ரசிகர்களின் மரியாதையை பெற்ற ரானா, மன்தீப் சிங் – காரணம் என்ன?