ஐபிஎல்: 2020 தொடரில் ஆட்டங்களை மாற்றிய டாப்-5 வீரர்கள்!

Update: 2020-11-11 06:48 GMT

2020ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று மும்பை இந்தியன்ஸ் அணி அசத்தியுள்ளது. அத்துடன் 5ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி மும்பை அணி சாதனைப் படைத்துள்ளது.

இந்நிலையில் இந்தத் தொடரில் ஆட்டங்களின் போக்கை தனது ஆட்டத்தினால் மாற்றியமைத்த டாப்-5 வீரர்கள் யார் யார்?

5. டிவில்லியர்ஸ்:

2020 தொடரில் பெங்களூரு அணி பிளே ஆஃப் வரை தகுதிப் பெற டிவில்லியர்ஸ் ஒரு முக்கிய காரணமாக அமைந்தார். அவர் சில போட்டிகளில் சிறப்பாக விளையாடி பெங்களூரு அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். மற்ற வீரர்களும் பேட்டிங்கில் சற்று கைகொடுத்திருந்தால் ஆர்சிபி அணி இம்முறை கோப்பையை வெல்ல முயற்சி செய்திருக்க முடியும்.

4. சூர்யகுமார் யாதவ்:

மும்பை அணியின் நம்பர் 3 வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் பல முறை ஆட்டத்தின் போக்கை மாற்றியுள்ளார். இந்தத் தொடரில் ரோகித் சர்மா சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் அந்தப் பாதிப்பை குறைக்கும் வகையில் சூர்யகுமாரின் ஆட்டம் அமைந்தது. இவர் வேகப்பந்து மற்றும் சுழற்பந்து ஆகிய இரண்டையும் திறம்பட சமாளித்து ஆடினார். அது மும்பை அணிக்கு பெரிய பலமாக அமைந்தது.

3. டிரென்ட் போல்ட்:

இந்த ஐபிஎல் தொடரில் பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் டிரென்ட் போல்ட் தான். இவரின் விக்கெட் வேட்டை தொடக்க ஓவர்களில் பேட்டிங் செய்யும் அணியை திணறடித்துள்ளது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் கூட டிரென்ட் போல்ட் சிறப்பாக பந்துவீசினார்.

2. ரபாடா:

டெல்லி அணி இம்முறை இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற ரபாடா ஒரு முக்கிய காரணமாக அமைந்தார். இந்தத் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் ரபாடா தான். இவரின் பந்துவீச்சை டெல்லி அணியை பல முறை தோல்வியிலிருந்து மீட்டுள்ளது. ரபாடா, நார்கே கூட்டணி டெல்லி அணிக்கு பெரிய பலமாக அமைந்தது.

1. ஷிகர் தவான்:

டெல்லி அணிக்கு பேட்டிங்கில் பெரிய பலமாக அமைந்தது ஷிகர் தவானின் தொடக்கம் தான். இவர் இந்தத் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு சதங்கள் அடித்து அசத்தினார். அத்துடன் இத் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஷிகர் தவான் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். டெல்லி அணி பெரிய இலக்குகளை எட்ட தவான் ஒரு முக்கிய காரணமாக அமைந்தார்.

இவர்கள் தவிர ராகுல் திவாட்டியா, சஞ்சு சாம்சான், வருண் சக்ரவர்த்தி உள்ளிட்ட வீரர்கள் ஒரு சில போட்டிகளில் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

மேலும் படிக்க: ஐபிஎல் தொடரில் லாரவை கவர்ந்த 6 இந்திய வீரர்கள் யார் தெரியுமா?