இந்திய மகளிர் அணி குறித்து அறியாத10 தகவல்கள் மனம் திறந்த கேப்டன் ஹர்மன்பிரீத், ராதா -வீடியோ
மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்நிலையில் பெர்த் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் இந்திய மகளிர் அணி ஆசிய சாம்பியன் அணியான பங்களாதேஷ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக ஐசிசி டி20 உலகக் கோப்பை ட்விட்டர் பக்கத்தில் இந்த இரு அணிகளின் வீராங்கனைகள் தங்களின் அணி குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
? ? @mandhana_smriti
?️♀️ ? @shikhashauny
? ? @JemiRodrigues
Harmanpreet Kaur and Radha Yadav don't hold back in spilling secrets about their teammates ? #T20WorldCup pic.twitter.com/aWdDs06yyu
— T20 World Cup (@T20WorldCup) February 23, 2020
இதுதொடர்பான வீடியோ ஐசிசி டி20 உலகக் கோப்பை ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ராதா யாதவ் அணியின் வீரர்கள் குறித்த சுவாரஸ்யமானவற்றை தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோவில், கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் அதற்கு அவர்கள் அளித்துள்ள பதில்கள் கீழே வருமாறு
1. இந்திய அணியில் யார் அதிகம் செல்ஃபி எடுப்பார்?
பதில்: விக்கெட் கீப்பர் தானியா பாட்டியா
2. இந்திய அணியில் மோசமாக நடனம் ஆடுபவர் யார்?
பதில்: ஸ்மிருதி மந்தானா
3. இந்திய அணியில் பாட்டிற்கு யார் முதலில் ஆடுவார்?
பதில்: ஜெமிமா ரோட்ரிக்ஸ்
4. காலையில் எழுந்தவுடன் யார் மிகவும் கோபத்துடன் இருப்பார்?
பதில்: அருந்ததி ரெட்டி
5. யார் மிகவும் தாமதாமாக வருவார்?
பதில்: ஷாபாலி வர்மா
6. யார் எப்போதும் செல்போனின் பயன் படுத்தி கொண்டிருப்பார்?
பதில்:ஸ்மிருதி மந்தானா
7. அணியில் யார் அதிகமாக ஜிம் செல்வார்கள்?
பதில்:ஹர்மன்பிரீத் கவுர், ஷிகா பாண்டே
8. யார் டிரெஸ்ஸிங் ரூமில் மிகவும் சேட்டை செய்வார்?
பதில்: வேதா கிருஷ்ணமூர்த்தி
9. இந்திய அணியில் யார் அதிக பேட்களை வைத்துள்ளனர்?
பதில்: ஹர்மன்பிரீத் கவுர் (7 பேட்கள்)
10. அணியில் உயரமான சிக்சர் விளாசும் வீராங்கனை யார்?
பதில்: ஹர்மன்பிரீத் கவுர், ஷாபாலி வர்மா, ஸ்மிருதி மந்தானா
இவ்வாறு ஹர்மன்பிரீத் கவுரும் ராதா யாதவும் பல கேள்விகளுக்கு தங்களின் பதில்களை அளித்துள்ளனர்.