குத்துச்சண்டையில் 6 பதக்கங்கள்.. இந்திய மகளிர் அசத்தல்

Update: 2020-01-21 19:11 GMT

செர்பியாவில் நடைபெற்ற ‘நேஷன்ஸ் கோப்பை’ குத்துச்சண்டை தொடரில், இந்திய வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர். மோனிகா (48 கிலோ), ரிட்டு கிரேவால் (51 கிலோ), மீனா குமாரி (54 கிலோ), பாக்யபதி (75 கிலோ) ஆகிய வீராங்கனைகள், வெவ்வேறு எடைப்பிரிவுகளில் பங்கேற்றிருந்தனர். இவர்கள் நால்வரும் இறுதிப் போட்டியில் விளையாடி வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். 4 வெள்ளிப்பதக்கங்கள், 2 வெண்கலப் பதக்கங்களுடன் ‘நேஷன்ஸ் கோப்பை’ குத்துச்சண்டையில் இந்திய மகளிர் அசத்தல்.

48 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில், ரஷ்யாவின் லூலியா சும்கலாகோவாவை எதிர்த்து மோனிகா போட்டியிட்டார். ஆனால், 1-4 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியை தழுவினார்.

இந்திய ஓபனில் தங்கப்பதக்கம் வென்ற பாக்யபதி, 75 கிலோ

எடைப்பிரிவில் மொரோக்கா வீராங்கனை எதிராக வீழ்ந்தார். இதே போல, மீனா குமாரி, ரிட்டு ஆகியோரும் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தனர். அதனால், இந்தியாவுக்கு 4

தங்கப்பதக்கங்கள் கிடைக்க இருந்த வாய்ப்பு பறிபோனது. எனினும், கடைசி வரை முழு

முயற்சியோடு விளையாடிய வீராங்கனைகள் வெள்ளிப் பதக்கங்களை அள்ளி வந்துள்ளனர்.

மேலும், 60 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட பவித்ரா, 2-3 என்ற புள்ளிக்கணக்கில் இத்தாலியின் ரெபேக்கா நிகோலியிடம் தோல்வியுற்றதால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. 64 எடைப் பிரிவில், க்ரோயேஷியாவின் சாராவிடம் வீழ்ந்த பசுமத்தாரியும் வெண்கலம் பதக்கத்தோடு நிறைவு செய்தார்.