ஆசிய யூத் மற்றும் ஜுனியர் வெய்ட்லிஃப்டிங் 2020: முதல் நாளிலேயே இரு பதக்கங்களை வென்ற இந்தியர்கள்
உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள தாஷ்கேன்ட் நகரில் நடக்கும் ஆசிய யூத் மற்றும் ஜுனியர் வெய்ட்லிஃப்டிங் 2020 போட்டியின் முதல் நாளிலேயே இரு பதக்கங்களை வென்று போட்டியை அற்புதமாக தொடங்கியுள்ளது இந்திய அணி. இந்திய அணி வென்ற இரு பதக்கங்களும் (வெள்ளி மற்றும் வெண்கலம்) பெண்கள் அணியினால் வெல்லப்பட்டது. உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடந்து வரும் இந்த போட்டியில் பெண்களுக்கான 45கிலோ கிராம் பிரிவில் கே வி எல் பவானி குமாரி வெள்ளி பதக்கமும், ஹர்ஷதா கொடு வெண்கல பதக்கமும் வென்றனர். 20 ஆசிய நாடுகளில் இருந்து மொத்தமாக 197 வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கிறார்கள்.