லியான்டர் பயஸ் - இந்திய டென்னிஸ் வரலாற்றின் சகாப்தம்

Update: 2020-02-17 16:51 GMT

உலகளவில் டென்னிஸை ஒர் அளவிற்கு தெரிந்திருப்பவருக்கும் பரிச்சியமான பெயர் லியான்டர் பயஸ். இவர் நமது நாட்டினை சேர்ந்தவர் என்பது ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய விஷயம். கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் டென்னிஸில் ஏராளமான சாதனைகள் புரிந்த பிறகு இந்த வருடம் ஓய்வு பெறுகிறார். பெங்களூரூ கேஎஸ்எல்டிஏ மைதானத்தில் நடைபெற்ற ஏடிபி சேலஞ்சர் போட்டியே அவர் இந்தியாவில் கடைசியாக ஆடியதாகும். இந்த தொடரில் அவர் இறுதிப்போட்டி வரை முன்னேறி அசத்தினார். பல ஆண்டுகளாக விளையாடி வரும் இவர் ஒவ்வொரு ஆட்டத்தினையும் புது உற்சாத்துடன் எதிர்கொண்டு ரசிகர்கள் மற்றும் சக வீரர்களின் மரியாதையை பெற்றுள்ளார். இறுதிப்போட்டிக்கு முன்னதாக முன்னாள் ஒலிம்பிக் வீரர்கள் பலரும் ஒன்று கூடி அவருக்கு சிறப்பான மரியாதை செய்தனர். இந்தியாவில் அவரின் இறுதிப்போட்டியை காண வந்திருந்த பல நூறு ரசிகர்களும் பயஸ் எடத்த ஒவ்வொரு புள்ளிக்கும் ஆரவாரம் செய்து கொண்டிருந்தார்கள்.

1996 அட்லாண்டா ஒலிம்பிக் போட்டிகளில் ஒற்றையர் பரிவில் வெண்கல பதக்கம் வென்றதிலிருந்து தொடங்கிய அவரது வெற்றி பயணம் இன்று வரை தொடர்கிறது. நாட்டிற்காக விளையாடுவதை எப்பொழுதும் கருதியவர் லியான்டர் பயஸ். அவர் விளையாடிய அனைத்து டேவிஸ் கோப்பை போட்டிகளிலும் இது வெளிப்படையாக தெரியும். டேவிஸ் கோப்பையில் உலகளவில் இரட்டையர் பிரிவில் அதிக வெற்றிகளை பெற்றிருப்பவர் லியான்டர் பயஸ் ஆகும்.ஏழு முறை ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைத்த அவர், எட்டாவது மற்றும் கடைசி முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முனைப்பில் உள்ளார். 46 வயதான அவர் இதுவரை 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருப்பது குறிப்படதக்கது.

டென்னிஸ் ஆடுவதை நிறுத்திவிட்டாலும் இந்திய டென்னிஸ் உலகின் மறுக்க முடியாத சகாப்தம் லியான்டர் பயஸ். பல இளைஞர்கள் கிரிக்கெட் டை விட்டு டென்னிஸ் பக்கம் செல்ல காரணமாக இருந்தவர். வளர்ந்துவரும் வீரர்களுக்கு சிறப்பான ரோல்மாடல். காலம் காலமாக டென்னிஸ் உலகம் இவரது சாதனைகளை கொண்டாடும். நாமும் இவரது பெயரை அடுத்து தலைமுறைக்கு நினைவுபடுத்தி கொண்டே இருப்போம்.