டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020: ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தகுதி

Update: 2020-01-29 03:08 GMT

உலகளவில் தடகளப் போட்டிகளில் இந்தியா பெரிய அளவில் பதக்கங்களை பெற்றதில்லை என்ற ஏக்கம் நாம் அனைவரிடமும் எப்போதும் உள்ளது. அந்த ஏக்கத்தை சற்று குறைக்க உருவெடுத்தவர் தான் நீரஜ் சோப்ரா. இவர் ஈட்டி எறிதல் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

இவர் முதல் முறையாக ஜூனியர் பிரிவில் பதக்கம் வென்று இந்தியாவை பெருமை படுத்தினார். அதன்பிறகு சர்வதேச போட்டிகள் சிலவற்றில் பதக்கங்களை வென்று அசத்தி வருகிறார். கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டிகளுக்கு பிறகு இவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. அதற்கு இவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

https://twitter.com/afiindia/status/1222232449742061569

அதன்பின்னர் ஒன்றரை ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் ஈட்டி எறிதல் போட்டிகளில் பங்கேற்றார். இவர் நேற்று தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஏ.என்.சி.சி. தடகள போட்டியில் களமிறங்கினார்.

இந்தப் போட்டியில் தனது முதல் முயற்சியில் 81.6 மீட்டர் தூரம் வீசினார். தனது இரண்டாவது முயற்சியில் 82 மீட்டர் தூரம் வீசினார். அடுத்த முயற்சியில் 82.57 மீட்டர் தூரம் வீசினார். இறுதியாக அவரது நான்காவது முயற்சியில் 87.86 மீட்டர் தூரம் வீசி அசத்தினார்.

https://twitter.com/TheBridge_IN/status/1222231213747785728?ref_src=twsrc^tfw|twcamp^tweetembed|twterm^1222231213747785728&ref_url=https://thebridge.in/breaking-neeraj-chopra-qualifies-tokyo-olympics-2020/

அவர் இறுதியாக வீசிய 87.86 மீட்டர் தூரத்தின் மூலம் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதி தூரமான 85 மீட்டரை கடந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு இவர் தகுதிப் பெற்றுள்ளார். இந்தத் தொடர் சர்வதேச போட்டியாக கருதுப்படும் என்பதை தென்னாப்பிரிக்க தடகள சங்கத்திடன் இந்திய தடகள சங்கம் உறுதி செய்துள்ளது.

இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறும் நான்காவது தடகள வீரராக நீரஜ் சோப்ரா உள்ளார். இவருக்கு முன்பு தடகளத்தில் கே.டி.இர்ஃபான், இந்திய கலப்பு தொடர் ஓட்ட அணி, அவினாஷ் சாப்லே ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக இவர் 2018ஆம் ஆண்டு ஆசிய போட்டியில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தியிருந்தார். எனவே அதேபோன்று இவர் வரும் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் வென்று தந்து அசுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.