“மறைந்த என் அப்பாவுக்காக இந்த விருது” - இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் உருக்கம்

Update: 2020-02-17 18:38 GMT

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு இன்று சார்பில், இந்திய அணி கேப்டன் மன்பிரீத் சிங்கிற்கு, 2019-ம் ஆண்டிற்கான சிறந்த ஹாக்கி வீரர் விருது வழங்கப்பட்டது.

1999-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், சிறந்த ஹாக்கி வீரர் விருதை பெறும் முதல் இந்தியர் என்ற

பெருமைக்கு மன்பிரீத் இப்போது சொந்தக்காரர். இந்த விருதுக்கு 6 ஹாக்கி வீரர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதில், அதிக வாக்குகள் பெற்று மன்பிரீத் சிங் வெற்றி பெற்றார்.

இது குறித்து பேசியுள்ள மன்பிரீத், “என்னுடைய விளையாட்டு பயணத்தில் எனக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்களும் நன்றிகள். ஆனால், என்னுடைய அப்பாவை நிச்சயம் குறிப்பிட்டாக வேண்டியது அவசியம். அவர் இப்போது இருந்திருந்தால், என்னை கண்டு பெருமைப்பட்டிருப்பார். எனக்கு எப்போதும் துணையாய் இருந்த அவருக்கு இந்த விருதை சமர்ப்பிற்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

2011-ம் ஆண்டு தேசிய அணியில் அறிமுகமான

மன்பிரீத், சிறப்பான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி, 2019-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் தகுதிச்சுற்றுப் போட்டிகளில்

வெற்றி பெற்றது. இதன் மூலம், 2020 ஒலிம்பிக்கில்

இந்திய ஹாக்கி அணி பங்கேற்பது உறுதியானது. ஏற்கனவே, 2012, 2016 ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி சார்பாக மன்ப்ரீத்

விளையாடியுள்ளார்.

இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாகவும், முக்கியமான வீரராகவும் தனது இடத்தை பதிவு செய்துள்ளார்

மன்பிரீத் சிங்.