சர்வதேச ஜூனியர் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையரில் முதல் முறையாக இந்தியாவுக்கு வெண்கலம்

Update: 2020-03-02 18:24 GMT

2020 யோனெக்ஸ் டட்ச் ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் சர்வதேச நெதர்லாந்தில் நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி வரை இந்திய வீராங்கனைகள் முன்னேறினர்.

அரை இறுதியில் விளையாடிய தஸ்னிம் மிர், மான்சி சிங் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர். சர்வதேச ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனைகள் வெண்கலப் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

குஜராத்தைச் சேர்ந்த தஸ்னம் மிர், கொரியாவின் சோ யுல் லீயை எதிர்கொண்டார். இந்த போட்டியில் 21-19, 22-20 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார். U-15 ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்றதில் இருந்து சிறப்பாக விளையாடி வருகிறார் மிர். இந்த வெற்றி அவரது பேட்மிண்டன் பயணத்தில் கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.

[embed]https://twitter.com/BAI_Media/status/1234366530537738240[/embed]

மற்றுமொரு அரை இறுதிப்போட்டியில் லக்னோவைச் சேர்ந்த மான்சி சிங், இந்தோனேசிய வீராங்கனையை எதிர்கொண்டார். சைஃபி ரிஸ்காவை எதிர்கொண்ட அவர், 11-21, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றார்.

இதே உத்வேகத்துடன் அடுத்து போட்டிகளுக்கும் தயாராகின்றனர். மார்ச் 4-8 முதல் நடைபெற இருக்கும் யோனெக்ஸ் ஜெர்மன் ஜூனியர் பேட்மிண்டன் போட்டியிலும் இந்திய வீராங்கனைகள் அசத்த உள்ளனர்.