போர்ச்சுகல் கிளப் சிடி ஏவ்ஸ் அணியில் சேரும் இந்திய கால்பந்து வீரர் சஞ்சீவ் ஸ்டாலின்

Update: 2020-02-11 17:34 GMT

யு-17 ஃபிபா உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடிய சஞ்சீவ் ஸ்டாலின், கிளபே டெஸ்போர்டிவோ டஸ் ஏவ்ஸ் என்ற போர்ச்சுகல் அணியுடன் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளார். 19 வயதான அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புதிய கிளப்பின் ஜெர்ஸியுடன் தான் உள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

லெஃப்ட்-பேக் இடத்தில் ஆடும் ஸ்டாலின், யு-17 ஃபிபா உலகக்கோப்பைக்காக ஏஐஃப்ஃப்-ன் எலைட் அகாடமியில் பயிற்சி எடுத்தார். அந்த தொடரின் பின், யு-20 வீரர்களை உள்ளடக்கிய இந்தியன் ஏரோஸ் அணியில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த அணிக்காக தனது முதல் ஆட்டத்தினை சென்னை சிட்டி அணிக்கு எதிராக விளையாடி, 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

யு-17 ஃபிபா உலகக்கோப்பையில் இந்திய அணி அடித்த ஒரே கோல் ஜீக்சன் சிங் மூலம் கொலம்பியாவிற்கு எதிராக வந்தது, அதற்கு அஸிஸ்ட் செய்தவர் சஞ்சீவ் ஸ்டாலின். இந்த ட்ரான்ஸ்ஃபெரின் மூலம், யூரோப்பிய கால்பந்து லீகினில் ஆடும் வாய்ப்பினை பெற்ற வெகு சில இந்தியர்களில் ஒருவரானர் சஞ்சீவ் ஸ்டாலின்.

விலா டஸ் ஏவ்ஸ், சான்டோ டிர்சோ என்ற ஊரில் உள்ள அணியான கிளபே டெஸ்போர்டிவோ டஸ் ஏவ்ஸ், போர்டோ, பென்ஃபிகா, மற்றும் ஸ்போர்டிங் லிஸ்பான் போன்ற சிறந்த போர்ச்சுகல் அணிகளை எதிர்த்து பிரிமியரா லீகாவில் விளையாடும் அணியாகும்.