உலக செஸ் தரவரிசையில் இந்தியாவின் கொனேரு ஹம்பி இரண்டாம் இடத்துக்கு முன்னேற்றம்

Update: 2020-03-02 20:06 GMT

இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் கொனேரு ஹம்பி, இப்போது உலக செஸ் தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ராபிட் செஸ் விளையாட்டு சாம்பியனான கொனேரு ஹம்பி, சமீபத்தில் கெய்ர்ன்ஸ் கோப்பையை கைப்பற்றினார்

2586 (Elo) புள்ளிகளுடன் உலக செஸ் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளார். 2658 புள்ளிகளுடன் முதல் இடத்தில் சீனாவின் யுஃபன் உள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனையான ஹரிகா துரோனாவல்லி, ஒன்பதாவது இடத்தில் உள்ளார். இதே போல, ஜூனியர் செஸ் உலக தரவரிசையில் தமிழக வீராங்கனை வைஷாலி ஒன்பதாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

சுவாரஸ்யமாக, உலக செஸ் தரவரிசை டாப் 10 இடங்களில் இந்திய வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை. முன்னாள் உலக சாம்பியன் விஷ்வநாதன் ஆனந்த், 16 வது இடத்திலும், விதித் குஜராத்தி 22-வது இடத்திலும் உள்ளனர். உலக செஸ் தரவரிசை ஜூனியர் பிரிவில், இந்தியாவின் நிஹல் சரின் 10-வது இடத்தில் உள்ளார்.