மகளிர் டி-20 உலகக் கோப்பை இந்திய vs இலங்கை: வெற்றி பெற இந்தியாவுக்கு 114 ரன்கள் இலக்கு

Update: 2020-02-29 05:41 GMT

ஐசிசி மகளிர் டி-20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று லீக் போட்டிகளை வென்றுள்ள இந்திய அணி, முதல் அணியாக அரை இறுதிக்கு முன்னேறிவிட்டது. இன்று இலங்கை அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் விளையாடுகிறது.

மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங் தேர்வு செய்தது. போட்டியின் மூன்றாவது ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்த இலங்கை அணி திணற ஆரம்பித்தது.

அதிகபட்சமாக 30 ரன்களுக்கு ஜோடி சேர்ந்திருந்த ஜெயங்கனி, மாதவி இணையை 7-வது ஓவரில் ராஜேஷ்வரி பிரித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு பிறகு, அடுத்தடுத்த ஓவரில் இலங்கை அணி விக்கெட்டுகளை இழந்தது.

 

கேப்டன் ஜெயங்கனி மட்டும் நிதானமான ஆட, 33 ரன்கள் எடுத்தார். மிடில் ஆர்டர் பேட்ஸ்வுமன்கள் சொற்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணியின் சூழற்பந்துவீச்சாளர்கள் ராஜேஷ்வரி, பூனம் யாதவ், ராதா யாதவ், தீப்தி ஷர்மா ஆகியோர் எதிரணியை ரன் எடுக்கவிடாமல் திணறடித்தனர்

நிறைய டிராப் கேட்சுகள் இருந்தாலும், அவ்வப்போது இந்திய வீராங்கனைகள் விக்கெட்டுகள் சரிய சரியான நேரத்தில் கேட்ச் பிடித்து உதவினர். 19 ஓவரின் போது வேகப்பந்துவீச்சாளர் ஷிகா பாண்டேவுக்கு ஒரு விக்கெட் கிடைத்தது. 9 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழக்கும் தருவாயில் இருந்தது

ஆனால், தில்ஹாரி - பிரபுதணி இணை தாக்குப்பிடித்து நின்றதில் இலங்கை அணி முழுமையாக 20 ஓவர்களை எதிர்கொண்டது. இதனால், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்தது.

ராதா யாதவ் 4 விக்கெட்டுகளும், ராஜேஷ்வரி 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். தீப்தி ஷர்மா, ஷிகா பாண்டே, பூனம் யாதவ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அரை இறுதியில் விளையாடுவதற்கு முன்பு கடைசி லீக் போட்டியையும் வென்று இந்திய அணி அசத்துமா என்பது அடுத்த இன்னிங்ஸில் தெரிந்துவிடும்.