ஐசிசி மகளிர் டி-20 உலகக் கோப்பை இந்தியா vs பங்ளாதேஷ்: 5 முக்கிய வீராங்கனைகள்

Update: 2020-02-23 15:14 GMT

2020 ஐசிசி டி-20 உலகக் கோப்பையை வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்தியா. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவினை வீழ்த்தி மற்ற போட்டி நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை நடக்கும் இரண்டாம் ஆட்டத்தில் பங்களாதேஷினை வென்று தங்களது அரையிறுதி வாய்ப்பினை அதிகப்படித்து கொள்வதில் முனைப்பாக இருப்பார்கள் இந்திய அணியினர்.

நாளை நடக்கும் ஆட்டத்தில் கவனிக்க வேண்டிய வீரர்கள்:

ஷஃபாலி வர்மா

இந்திய அணிக்கு தனது அதிரடி தொடக்கம் எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளார் இவர். 16 வயதே ஆகி இருந்தாலும் எந்தவித பயமும் இன்றி விளையாடி அசத்தினார். நாளைய ஆட்டத்திலும் இதனைய தொடரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு

பூனம் யாதவ்

இந்திய அணி முதல் ஆட்டத்தில் வென்றதற்கு முக்கிய காரணம். இவரின் சுழற்பந்து மாயஜாலத்தை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர் ஆஸ்திரேலிய அணியினர். இந்திய அணி தொடரில் நீண்ட தூரம் செல்ல இவரின் பங்களிப்பு மிகவும் அவசியம்.

ஷிகா பாண்டே

இந்திய அணியின் தற்போதய மூத்த வேகபந்து வீச்சாளர். ஜுலன் கோசுவாமி என்ற ஜாம்பவானின் இடத்தை நிரப்ப வேண்டிய கட்டாயம். ஆனால் எந்தவித அலட்டலும் இல்லாமல் இறுதி ஓவர்களில் தனது அனுபவத்தினால் இந்தியாவிற்கு வெற்றியை பெற்று தந்தார் ஷிகா பாண்டே.

தீப்தி ஷர்மா

இந்திய அணியின் முதன்மையான ஆல்ரவுண்டர் என்ற தனது பொருப்பினை உணர்ந்து, அணி சிரமத்தில் இருந்தபொழுது பேட்டிங் மற்றும் பெளலிங் இரண்டிலும் அசத்தினார்.

ஜகனாரா அலாம்

பங்களாதேஷ் அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர். சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் குறைந்த ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 9 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். சிறிது பேட்டிங்கும் செய்வார் என்பது கூடுதல் சிறப்பு. இந்தியாவிற்கு எதிராக பங்களாதேஷின் முக்கிய துடுப்பு சீட்டாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை