ஐசிசி 2020 மகளிர் டி20 உலகக்கோப்பை: இன்றைய போட்டியிலிருந்து இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள்

Update: 2020-02-24 17:41 GMT

உலகக்கோப்பை முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்திய புத்துணர்ச்சியுடன் இரண்டாவது ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டது இந்தியா அணி.

டாஸ் வென்று இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்தது பங்களாதேஷ். ஆட்டத்தின் முடிவில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா. அடுத்த ஆட்டத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. அவற்றில் சிலவற்றை காணுவோம்.

கடந்த ஆட்டத்தினை போலவே இந்த ஆட்டத்திலும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் சொதப்பியது. ஷஃபாலி வழக்கம் போல அதிரடி தொடக்கம் கொடுக்க, ஜெமிமா பொருப்பாக ஆடிக்கொண்டிருக்க மற்றவர்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. கடந்த ஆட்டத்தினை போலவே இன்றும் கேப்டன் ஹர்மன்பீரித்தின் அவுட் ஆன விதம் பெரும் கவலையளிக்கிறது.

பெளலிங்கில் பூனம் யாதவ் மற்றும் ஷிகா பாண்டேவினை மட்டும் பெரிதும் நம்பியிருப்பது மற்ற ஆட்டங்களில் அணியை பாதிக்கும். அருந்ததி இன்று ஒரளவுக்கு சிறப்பாக பந்து வீசியிருந்தாலும் அதிக ரன்கள் கொடுப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.

கடந்த போட்டியினை போலவே இந்த போட்டியிலும் இந்திய அணியின் பீல்டிங் சுமார் தான். மொத்தமாக 3 கேட்சுகளை தவறவிட்டனர். இதே நிலை நீடித்தால் பின்வரும் ஆட்டங்களில் அது அணியினை பெரிதாக பாதிக்கும். அடுத்த ஆட்டத்தில் இந்திய அணி தங்களது பீல்டிங்கினை நிச்சயமாக மேம்படுத்தியாக வேண்டும். அதேபோல் இன்று நடந்த இரண்டு ரன்ஒவுட்களும் மற்றொரு கவலைக்குரிய விஷயமாகும்.