2020 ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கு தகுதிபெற்ற அணிகள் - ஒரு அலசல்

Update: 2020-03-03 16:15 GMT

பிப்ரவரி 21 முதல் ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 மகளிர் உலகக்கோப்பை இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. இந்த அணிகள் கடந்து வந்த பாதையினை காண்போம்:

இந்தியா:

கோப்பையை வெல்லக்கூடய அணிகளில் ஒன்றாக தொடரினில் களமிறங்கிய இந்திய அணி முதல் ஆட்டத்திலிருந்தே அதிரடியாக விளையாடினர். நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலகக்கோப்பையை சிறப்பாக தொடங்கினர்.அந்த வெற்றிக்கொடுத்த தன்னம்பிக்கையில் அடுத்தடுத்த ஆட்டங்களில் மேலும் சிறப்பாக ஆடி பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்தினர்.தொடக்க ஆட்டக்காரர் ஷஃபாலி வர்மா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ் ஆகியோர் இதில் மிக முக்கிய பங்காற்றினர். ஶ்ரீலங்காவிற்கு எதிரான கடைசி லீக் போட்டியில் முதல் முறையாக சேசிங் செய்த போதிலும் எந்த தடுமாற்றமும் இல்லாமல் இலக்கினை சுமுகமாக எட்டி தங்களது க்ருப்பினில் முதலிடம் பிடித்தனர்.

ஆஸ்திரேலியா:

நடப்பு சாம்பியன், போட்டியை நடத்தும் நாடு என பல எதிர்ப்பார்ப்புகளுடன் தொடரினை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஆனால் அதன்பின்னர் சுதாரித்து விளையாடிய அவர்கள் மற்ற 3 போட்டிகளை வென்று அரையிறுதிக்கு தகுதிபெற்றனர். ஆனால் தற்போது காயம் காரணமாக நட்சத்திர வீரர் எலைஸ் பெர்ரி போட்டியிலுருந்து வெளியேறியது அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். இரண்டாவது அரையிறுதி போட்டியில் சவுத் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது ஆஸ்திரேலியா.

சவுத் ஆப்பிரிக்கா:

இந்த தொடரில் அனைவருக்கும் ஆச்சரியம் அளித்த அணி சவுத் ஆப்பிரிக்கா தான். முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தினை வீழ்த்தியதல் இருந்து தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகின்றனர். ஆனால் அரையிறுதியில் பலமான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்வது புதிய சவாலாக இருக்கும்.

இங்கிலாந்து:

கடந்த முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணி, இந்த முறை கோப்பை வெல்லும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. முதல் ஆட்டத்தில் தோல்விடைந்த போதிலும் மற்ற ஆட்டங்களில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். இந்திய அணியை அரையிறுதியில் எதிர்கொள்ளும் இவர்கள், கடந்த உலகக்கோப்பையில் இந்தியாவினை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

பலம் வாய்ந்த நான்கு அணிகள் மோதுவதால் அரையிறுதி போட்டிகளில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. ஆனால் எந்த போட்டியிலும் மழை குறிக்கிடகூடாது என்பது மட்டுமே அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு.