ஐசிசி மகளிர் உலகக்கோப்பை 2020: இந்தியா மற்றும் ஶ்ரீலங்கா அணிகளின் 3 முக்கிய வீரர்கள்

Update: 2020-02-28 15:06 GMT

ஐசிசி 2020 மகளிர் உலகக்கோப்பையில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது இந்திய அணி. ஶ்ரீலங்காவிற்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் இதுவரை விளையாடாத வீராங்கனைகளுக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை நடக்கும் ஆட்டத்தில் கவனிக்க வேண்டிய வீரர்கள்:

ராதா யாதவ்

நியூசிலாந்திற்கு எதிரான கடந்த போட்டி தான் இந்த உலகக்கோப்பையில் இவர் விளையாடும் முதல் போட்டி என்றாலும் பேட்டிங், பெளலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்தினார். இக்கட்டான சுழ்நிலையில் 14 ரன்கள் அடித்ததோடு, பெளலிங்கில் 25 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டினை வீழ்த்தினார். அத்தோடு 2 முக்கிய கேட்சுகளை பிடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

சாமரி அட்டப்பட்டு

ஶ்ரீலங்கா அணியின் முதுகெலும்பு அவர்களின் கேப்டன் தான். அணியின் தொடக்க ஆட்டக்காரரான அவர் இந்த உலகக்கோப்பையில் சிறந்த ஃபார்மில் உள்ளார். இந்திய அணிக்கு எதிராக அதிக ரன்களை குவிக்க இவரின் பங்களிப்பு மிகவும் முக்கியம்.

ஹர்மன்பீரித் கவுர்

இந்திய அணியின் மிகப்பெரிய நம்பிக்கை, தனது கேப்டன் பொருப்பினை சிறப்பாக செய்தாலும் ஆனால் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். அவர் அவுட் ஆகும் விதம் மேலும் கவலையளிக்கிறது. அரையிறுதிக்கு முன்னதாக நடக்கும் ஆட்டம் என்பதால் இந்த போட்டியில் அவர் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்பதே அனைத்து ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாகும்.