'நான் ஒன்றும் தோனியல்ல'-வேடின் வார்த்தையால் ட்விட்டரில் குதுகலம் அடைந்த தோனி ரசிகர்கள் !

Update: 2020-12-07 04:21 GMT

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியினர் ஒரு நாள் போட்டி தொடரை இழந்த ஏமாற்றத்தை தள்ளி வைத்து விட்டு சிறப்பாக விளையாடி டி20 தொடரை கைப்பற்றியுள்ளனர். நேற்று நடந்த இரண்டாவது ஆட்டத்தின் போது இந்திய அணி பேட்டிங் செய்த போது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு நடைபெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் பேட்டிங் செய்த போது ஆஸ்திரேலியா அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் சிறப்பாக செயல்பட்டு ஸ்டம்ப்பிங் நிகழ்த்தினார். ஆனால் சரியான நேரத்தில் காலை தரையில் வைத்ததால் தப்பித்தார் தவான்.

[embed]https://twitter.com/cricketcomau/status/1335538622464815104[/embed]

இதுகுறித்து வேட், தவானிடம் தான் எம் எஸ் தோனி போல் வேகமாக செயல்பட முடியவில்லை எனக் கூற தவானும் சிரித்துக்கொண்டே ஆமாம் எனக் கூறினார். இந்த நிகழ்வினை ஆஸ்திரேலியா அணி தங்களது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட அது மிகவும் வைரலானது. குறிப்பாக தங்களது ஆஸ்தான நாயகனை இனி தேசிய போட்டிகளில் காண முடியாது என்ற சோகத்தில் இருந்த தோனி ரசிகர்களை இது மிகவும் குஷிப்படுத்தியது. இந்த நிகழ்வினை வைத்து பல்வேறு மீம்களை உருவாக்கி தோனியை கொண்டாடி தீர்த்தனர்.

[embed]https://twitter.com/CSKFansOfficial/status/1335591090326368259[/embed]

[embed]https://twitter.com/im_prashanth7/status/1335598081052561410[/embed]

[embed]https://twitter.com/BhavyaDhoni/status/1335545764114644992?s=08[/embed]

[embed]https://twitter.com/PRIYANSHC17/status/1335609929269309440[/embed]

[embed]https://twitter.com/PriyankaJShukla/status/1335567681848688645[/embed]

[embed]https://twitter.com/RVCJ_FB/status/1335560174111580165[/embed]

[embed]https://twitter.com/Dexter_Memes/status/1335572359315509251[/embed]