கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹாக்கி வீரர் மன்தீப் சிங்

Update: 2020-08-11 12:13 GMT

இந்திய ஆடவர் ஹாக்கியின் முன்கள ஆட்டக்காரர் மன்தீப் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில் ரத்தத்தில் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இதனால் அவருக்கு ஆபத்து ஏதுவும் இல்லை எனவும் அவர் உடல்நிலை நன்றாக உள்ளதாக இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே கடந்த வெள்ளிக்கிழமை இந்திய கேப்டன் மன்பிரீத் சிங் உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அனைவருக்கும் பெங்களூருவில் நடக்கும் என அறிவிக்கப்பட்ட தேசிய முகாமுக்கு வந்த பிறகுதான் கொரோனா தொற்று ஏற்பட்டது. மற்ற ஐவரும் பெங்களூரு மையத்தில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் மெல்லிய தொற்று அறிகுறிகளே காணப்படுவதாகவும், அனைவரும் தற்போது நலமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் மந்தீப் சிங்கின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு திடீரென இயல்புக்கும் கீழே குறைந்தது. இதனையடுத்து அவர் மிதமான பாதிப்பு நிலையிலிருந்து இன்னும் கொஞ்சம் தீவிர நிலையை எட்டியுள்ளதாகத் தெரிகிறது. இதனையடுத்து எஸ்.எஸ். ஸ்பார்ஷ் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவரவர் சொந்த ஊர்களில் இருந்த வீரர்களை வருகிற 20ஆம் தேதி முதல் பயிற்சி முகாமிற்கு, பெங்களூர் சாய் மையத்திற்கு அழைத்தது அவசரமான முடிவு என முன்னாள் வீரர்கள் கருத்து கூறி வருகின்றனர்.