விபத்திலிருந்து மீண்ட இளம் வீராங்கனை கங்குத்ரிக்கு முதல் தங்கப்பதக்கம்!

Update: 2020-01-18 12:37 GMT

இளையோருக்கான ‘கேலோ இந்தியா யூத் கேம்ஸ்’ மூன்றாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், 21 வயதுக்கு உட்பட்டோருக்கான சைக்கிள் போட்டியில், அசாமைச் சேர்ந்த கங்குத்ரி பொர்டோலை தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். விபத்திலிருந்து மீண்ட வீராங்கனை கங்குத்ரிக்கு முதல் தங்கப்பதக்கம் இது

ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தால் உடல்நலத்தை இழந்த கங்குத்ரி இப்போது மீண்டு வந்திருபதுதான் அவரது வெற்றிக்கதை.

கொடூரமான சாலை விபத்தினால் உடலின் பல பகுதிகளிலும் காயம் ஏற்பட்டிருந்த்தால், ஓர் ஆண்டு படுத்த படுக்கையாக இருந்துள்ளார் கங்குத்ரி. எழுந்து நடக்க முடியுமா என்ற சந்தேகத்துக்கு மத்தியில் தொடர்ந்து போராடிய கங்குத்ரி இன்று விளையாட்டில் சாதித்து கொண்டிருக்கிறார்.

இது குறித்து பேசிய கங்குத்ரி “என்னுடைய அப்பா காவல் துறையில் பணியாற்றி வருபவர். என்னுடைய போராட்டத்தில் எனக்கு முழு ஆதரவு கொடுத்தவர். விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற என் கனவுக்கு ஊக்கம் அளித்தவர். அவர் இல்லையென்றா நான் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது” என்கிறார்.

விபத்துக்கு பிறகு உடல் ஒத்துழைக்காததால், விளையாட்டில் கவனம் செலுத்த முடியுமா என்ற சந்தேகம் இருந்துள்ளது கங்குத்ரிக்கு. ஆனால், இப்போது இளையோருக்கான கேலோ இந்தியா போட்டியில் தங்கப்பதக்கத்தை வாங்கியது மூலம், இனியும் தயங்க போவதில்லை என்கிறார் உற்சாகமாக!

“ஏற்கனவே சாலை விபத்து ஏற்பட்ட அனுபவத்தல், களத்தில் நான் கொஞ்சம் கவலையாக இருந்தேன். யார் மீதும் மோதிவிட கூடாது என்ற உணர்வு இருந்து கொண்டே இருந்தது. இறுதியில், தங்கம் ஜெயித்துவிட்டேன்” என்கிறார் கங்குத்ரி

விபத்துக்கு பிறகு மீண்டு வந்த கங்குத்ரிக்கு முதல் தங்கப்பதக்கம் இது. கடந்த ஆண்டு நடைபெற்ற ‘ரோடு நேஷனல்ஸ்’ தொடரில் பங்கேற்ற அவர், போட்டியின் நடுவே கீழே விழுந்துவிட்டார். விபத்து ஏதும் ஏற்படாதத்தால், மீண்டும் எழுந்து சைக்கிளை ஓட்டிய கங்குத்ரி, அந்த போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை ஈட்டினார்.

தீவிர பயிற்சிக்கு பிறகு இப்போது கேலோ போட்டிகளில் பங்கேற்ற கங்குத்ரிக்கு,

இதுவே முதல் தங்கம்!

கங்குத்ரியின் வெற்றியின் பாராட்டிய அசாம் மாநில விளையாட்டு துறை இயக்குனர்

கூறியதாவது, “சைக்கிளிங் என்பது விலை உயர்ந்த விளையாட்டு. அதற்கான பொருட்களும்,

செலவும் அதிகம். ஆனால், சைக்கிளிங் விளையாட்டில் சாதிப்பவர்கள் எல்லாம் நடுத்தர

குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. அவர்களின் திறமைகளுக்கு ஏற்ற பயிற்சி இடங்களை அமைத்து

தர திட்டமிட்டுள்ளோம்” என்றார்