பெட் கோப்பை டென்னிஸ்: விலகினால் சானியாவின் ஒலிம்பிக் வாய்ப்பு பறிபோகுமா?

Update: 2020-01-27 13:26 GMT

மகளீர் குழு டென்னிஸ் போட்டியான பெட் கோப்பை அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணியில் அனுபவ வீராங்கனை சானியா மிர்சா இடம்பெற்றுள்ளார். அவருடன் சேர்ந்து ரியா பாட்டியா, ருதுஜா போசேலே உள்ளிட்டோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்த அணியின் பயிற்சியாளராக அங்கிதா பாம்ப்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டிகள் சீனாவில் நடைபெற இருந்தது. எனினும் சீனாவில் கொரானோ வைரஸ் பாதிப்பு உள்ளதால் அங்கு விளையாட இந்திய டென்னிஸ் சங்கம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இந்தப் போட்டிகளை சீனாவிலிருந்து கஜகிஸ்தான் நாட்டிற்கு மாற்றி சர்வதேச டென்னிஸ் சங்கம் உத்தரவிட்டது.

எனினும் இந்தத் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் காலில் ஏற்பட்ட காய காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் தொடரிலிருந்து சானியா மிர்சா விலகினார். அத்துடன் அவர் 2-3 வாரங்கள் வரை ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். எனவே அடுத்த மாதம் நடைபெறும் போட்டியில் சானியா மிசா பங்கேற்பது சிறிது சந்தேகமாக உள்ளது.

இந்தத் தொடரில் பங்கேற்காவிட்டால் சானியாவிற்கு ஒலிம்பிக் வாய்ப்பும் பறிபோகும் நிலை ஏற்பட்டு விடும். ஏனென்றால் சர்வதேச டென்னிஸ் சங்கத்தின் விதிமுறைகளின் படி ஒரு வீரர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றால் அவர் தனது நாட்டின் டேவிஸ் கோப்பை அணி அல்லது பெட் கோப்பை அணியில் இடம்பெற்று இருக்க வேண்டும். அத்துடன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பு இந்தத் தொடர்களில் மூன்று முறை விளையாடி இருக்கவேண்டும்.

சானியா

மிர்சா கடைசியாக கடந்த 2016ஆம்

ஆண்டு நடைபெற்ற பெட் கோப்பை

தொடரில் பங்கேற்றார்.

அதன்பின்னர்

அவர் இத்தொடரில் பங்கேற்கவில்லை.

எனவே

அவர் 2020இல்

பெட் கோப்பையில் விளையாடி

இருந்தாலும் அவர் ஒலிம்பிக்

போட்டிக்கு தகுதி பெறுவதில்

சிக்கல் இந்திருக்கும்.

ஆனால்

அப்போது அவர் இரண்டு ஆண்டுகள்

மகப்பேறு விடுப்பில் இருந்ததை

கணக்கில் காட்டி வாய்ப்பு

பெற முய்றசி செய்திருக்க

முடியும்.

எனினு

அவர் 2020

தொடரில்

விளையாடாமல் இருந்தால்,

ஒலிம்பிக்

தொடரில் பங்கேற்பதில் அவருக்கு

சிக்கல் அதிகமாக இருக்கும்

என்று கருதப்படுகிறது.

பெட்

கோப்பை தொடரில் இந்திய அணி

சீனா,

இந்தோனேஷியா,

கொரியா,

உஸ்பேகிஸ்தான்

உள்ளிட்ட அணிகளை எதிர்கொள்ள

உள்ளது குறிப்பிடத்தக்கது.