"விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுங்கள்"- கோலியிடம் கூறிய ரசிகர்கள்

Update: 2020-12-09 13:34 GMT

இந்திய அரசு அறிவித்துள்ள புதிய வேளாண் சட்டத்திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் கிட்டத்தட்ட இரண்டு வாரமாக போராடி வரும் விவசாயிகளுக்கு உலகெங்கிலும் பல இடங்களிலிருந்து ஆதரவு பெருகி வந்த நிலையில் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலத்தை சேர்ந்த பல விளையாட்டு வீரர்கள் தங்களது ஆதரவினை தெரிவித்து தாங்கள் வாங்கிய பட்டங்களை திருப்பி கொடுக்க முன்வந்தனர். நேற்று பஞ்சாபினைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் மந்தீப் சிங் இந்த போராட்டத்தில் நேரில் சென்று பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது.

[embed]https://twitter.com/MansoorAzad/status/1336004471822962688[/embed]

இந்நிலையில் சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து இந்திய அணி நேற்று விளையாடிய போது ரசிகர் ஒருவர் கேப்டன் விராட் கோலியைப் பார்த்து, " இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்து கொள்ளுங்கள். விவசாயிகளின் ஒற்றுமை தொடரட்டும்" ‌எனக் கூறியுள்ளார். அவர் கூறியது கோலிக்கு கேட்டதா இல்லையா என்று தெரியவிட்டாலும், இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. அர்ஜூனா விருது வென்ற முன்னாள் கூடைப்பந்து வீரர் சஜ்ஜன் சிங் சீமா தொடங்கிய இந்த விருதினை திருப்பி கொடுக்கும் முயற்சியில் தற்போது 30 விளையாட்டு வீரர்கள் ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது.