டோக்கியோவில் நடக்கும் துப்பாக்கி சுடுதல் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இளவேனில் வளறிவன்

Update: 2020-03-02 16:18 GMT

ஜப்பானில் ஏப்ரல் 16 முதல் 25 வரை நடக்கவுள்ள ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் டெஸ்ட் தொடருக்கான 17 நபர்கள் கொண்ட அணியை அறிவித்துள்ளது நேஷனல் ரைஃபிள் அசோஷியேசன் ஆஃப் இந்தியா. இந்தியாவிற்காக 2020 ஒலிம்பிக்ற்கு தகுதிபெற்ற 14 நபர்கள் இந்த தொடரில் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான ரைஃபிள் 3-பொஷிசன் போட்டியில் அஞ்சும் மொட்கில் பங்கேற்க, ஏர் ரைஃபிள் பிரிவில் அபுர்வி சன்டேலா மற்றும் இளவேனில் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

முதலில் அஞ்சும் தான் இந்த போட்டியில் பங்கேற்பதாக இருந்த நிலையில், கடந்த வருடத்தின் இறுதியில் தனது அபாரமான பெர்ஃபாமன்ஸ் மூலம் இந்த இடத்தினை பிடித்தார் இளவேனில். தமிழ்நாட்டினை சேர்ந்த 20 வயதான இவர், 2018 ஐஎஸ்எஸ்எப் ஜீனியர் உலகக்கோப்பையில் தங்கப்பதக்கம் வென்றவர். அதன் பிறகு 2019 உலக யுனிவர்ஸிட்டி போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்றார். தொடர்ந்து 2019 ஜீனியர் உலகக்கோப்பையில் மீண்டும் தங்கம் வென்றார். அனைத்திற்கும் மேலாக , சைனாவில் நடந்த 2019 ஐஎஸ்எஸ்எப் உலகக்கோப்பையில் 10மீ ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்றதன் மூலம் உலகத் தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தினார்.