மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் 2020 ஆவணப்படம் நாளை நெட்ஃபிளிக்ஸில் ரிலீஸ் ! -டிரைலர் வீடியோ

Update: 2020-08-13 11:01 GMT

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தொடரில் இந்திய மகளிர் அணி சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டி வரை சென்றது.

இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய மகளிர் அணியிடம் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தது. எனினும் இந்தத் தொடர் முழுவதும் இந்திய வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக இந்திய அணியின் ஷாபாலி வெர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடர்பான ஆவணப் படத்தை ஐசிசி வெளியிட உள்ளது. இதனை பிரபலமான ‘‘நெட்ஃபிளிக்ஸ்’ ஓடிடி தளத்தில் நாளை வெளியிட உள்ளது. இதில் மகளிர் உலகக் கோப்பையில் நடைபெற்ற சிறப்பான தருணங்கள், வீராங்கனைகளின் ஆட்டங்கள் மற்றும் அது குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர்களின் கருத்து ஆகியவை இடம்பெற உள்ளன.

ஐசிசி இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் தகவலை வெளியிட்டுள்ளது. இது ஐசிசியின் 100% கிரிக்கெட் என்ற திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப் படத்திற்கு ‘பியாண்ட் த பவுண்டரி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பான டிரைலரையும் வெளியிட்டுள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.