"சில நேரங்களில் வேறு விளையாட்டிற்கு மாறிவிடலாம் என்ற எண்ணம் எனக்கு வந்தது"- மனம் திறந்த வில்வித்தை நட்சத்திரம் தீபிகா

Update: 2020-01-23 10:41 GMT
"சில நேரங்களில் வேறு விளையாட்டிற்கு மாறிவிடலாம் என்ற எண்ணம் எனக்கு வந்தது"- மனம் திறந்த வில்வித்தை நட்சத்திரம் தீபிகா
  • whatsapp icon

இந்தியாவில்

வில்வித்தை விளையாட்டு

என்றவுடன் அனைவருக்கும்

நியாபகம் வரும் ஒரு பெயர்

தீபிகா குமாரி தான்.

ஏனென்றால்

2009ஆம்

ஆண்டு தனது 15ஆவது

வயதில் உலக யூத் வில்வித்தை

சாம்பியன்ஷிப் பட்டத்தை

தீபிகா குமாரி வென்றார்.

அப்போது

அவர் மீது ஒரு சிறிய வெளிச்சம்

படத் தொடங்கியது.

அதன்பின்னர்

2010ஆம்

ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த்

போட்டியில் தனிநபர் பிரிவில்

ஒரு தங்கப் பதக்கத்தையும்,

குழுப்

பிரிவில் ஒரு தங்கப்பதக்கத்தையும்

இவர் வென்றார்.

அப்போது

ஜார்க்கண்ட் மாநிலத்தைச்

சேர்ந்த இந்த இளம் சிறுமி

இந்தியாவின் அடுத்த நம்பிக்கை

நட்சத்திரமாக உயர்ந்தார்.

அனைவரின்

எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு,

2012ஆம்

ஆண்டு மே மாதம் வில்வித்தைக்கான

உலகக் கோப்பை தொடரில் தீபிகா

குமாரி தங்கப்பதக்கம் வென்று

சாதனைப் படைத்தார்.

அத்துடன்

அவர் தனிநபர் பிரிவில் உலக

தரவரிசையில் முதலிடம்

பிடித்தார்.

அந்த

ஆண்டு லண்டன் ஒலிம்பிக்

போட்டிகளில் தீபிகா நிச்சயம்

பதக்க வெல்லுவார் என்று

அனைவரும் ஆவலுடன் இருந்தனர்.

எனினும்

அவர்களது கணிப்பு தவறாகியது.

உலக

தரவரிசையில் முதலிடத்தில்

இருந்த தீபிகா குமாரி லண்டன்

ஒலிம்பிக் போட்டியின் முதல்

சுற்றிலேயே தோல்வி அடைந்து

வெளியேறினார்.

அதன்பின்னர்

3

ஆண்டுகள்

தீபிகா மீது பெரிய அளவில்

வெளிச்சம் படவில்லை.

மீண்டும்

2016ஆம்

ஆண்டு பெண்களின் ரிகர்வ்

பிரிவு வில்வித்தையில் உலக

சாதனையை சமன் செய்தார்.

அந்த

ஆண்டு ரியோ ஒலிம்பிக் நடைபெற

இருந்ததால் தீபிகா குமாரி

மீண்டும் அனைவரின் கவனத்தையும்

ஈர்த்தார்.

அந்த

முறை நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்

போட்டியில் தீபிகா குமாரி

முதல் இரண்டு சுற்றுகளில்

வெற்றிப் பெற்றார்.

எனினும்

காலிறுதி போட்டிக்கு முந்தைய

சுற்றில் தோல்வி அடைந்து

மீண்டும் தீபிகா குமாரி

வெளியேறினார்.

இந்நிலையில்

இந்த ஆண்டு நடைபெற உள்ள டோக்கியோ

ஒலிம்பிக் போட்டிகளுக்கு

தீபிகா குமாரி மீண்டும் தகுதி

பெற்றுள்ளார்.

கடந்த

ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற

ஆசிய வில்வித்தை போட்டியில்

தங்கம் வென்று ஒலிம்பிக்

போட்டிக்கான தகுதியை தீபிகா

குமாரி அடைந்தார்.

தற்போது

ஓலிம்பிக் போட்டிக்கு தயாராகி

வரும் தீபிகா குமாரி தனது

மனதில் இருந்த இன்னல்கள்

குறித்து மனம் திறந்துள்ளார்.

இதுகுறித்து

அவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு

பேட்டி அளித்துள்ளார்.

அதில்,

“என்னுடைய

மனம் எப்போது அமைதியாக

இருப்பதில்லை.

அது

எப்போது வில்வித்தை விளையாட்டை

பற்றி மட்டுமே நினைத்து

கொண்டிருக்கிறது.

வில்வித்தை

விளையாட்டு என்பது மனநிலை

சார்ந்த விளையாட்டு.

ஏனென்றால்

கவனம் சிதறி ஒரு வேறு சிந்தனைக்கு

சென்றால் அது ஆட்டத்தையே

முடித்து விடும்.

பல

நேரங்களில் நெருக்கடி நிலையை

சமாளிக்க முடியாமல் நான்

அழுதிருக்கிறேன்.

கடினமாக

உழைத்திருந்தாலும் சில

நேரங்களில் அதற்கான பலன்

கிடைக்காமல் போகும்.

அது

மிகவும் நெருக்கடியான நிலையாக

இருக்கும்.

அத்துடன்

இவர் ஒவ்வொரு முறையும் ஒலிம்பிக்

போட்டிகளுக்கு தகுதி பெறுவார்.

ஆனால்

பதக்கம் வெல்ல மாட்டார் என்று

சிலர் கூறுவதை என்னால் கேட்க

முடிந்தது.

அது

என்னுடைய மொத்த உழைப்பையும்

உடைக்கும் விதிமாக இருக்கும்.

இதனால்

பல நேரங்களில் வில்வித்தையை

விட்டு வேறு எதாவது விளையாட்டிற்கு

மாறுவோமா என நான் நினைத்து

உண்டு.

”எனத்

தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு

முறையும் கனவாகவே இருக்கும்

தீபிகாவின் ஒலிம்பிக் பதக்க

வெற்றி இம்முறை நிறைவேற

வேண்டும் என்பதே அனைவரின்

எண்ணமாக இருக்கிறது.