டேவிஸ் கோப்பை குவாலிஃபையர்ஸ் 2020: குரோஷிய அணியிடம் இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியை தழுவிய இந்திய அணி

Update: 2020-03-06 19:05 GMT

குரோஷியாவில் நேற்று தொடங்கிய டேவிஸ் கோப்பை குவாலிஃபையர்ஸ் ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் குரோஷியாவினை எதிர்கொண்டது இந்தியா. இந்த அணியில் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், ராம்குமார் ராமநாதன், சுமித் நகால், லியான்டர் பயஸ், ரோகன் போபன்னா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். திவிஜ் சரண் ரிசர்வ் வீரராக உள்ளார். முதல் நாள் நடக்கும் இரண்டு ஒற்றையர் ஆட்டங்களில் பிரஜ்னேஷ் மற்றும் ராம்குமார் ஆகியோர் விளையாடுவார்கள் என முன்னறே அறிவிக்கப்பட்டிருந்தது.

முதல் ஆட்டத்தில் களமிறங்கிய பிரஜ்னேஷ், போர்னா கோஜோவை எதிர்கொண்டார். ஆட்டத்தை சிறப்பாக தொடங்கிய அவர் முதல் செட்டினை என்ற 6-3 கணக்கில் வென்றார். ஆனால் தரவரிசையில் மிகவும் பின்னனியில் இருக்கும் போர்னா அடுத்தடுத்த செட்களில் அதிரடியாக ஆடி பிரஜ்னேஷினை திணறடித்தார். இதன்முலம் ஆட்டத்தின் முடிவில் 6-3, 4-6, 2-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார் பிரஜ்னேஷ்.

இந்த டையின் இரண்டாவது ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 37ஆவது இருக்கும் முன்னனி வீரரான மரின் சிலிச்சினை எதிர்கொண்டார் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன். இந்த ஆட்டத்தில் சிலிச் எளிதாக வென்றுவிடுவார் என அனைவரும் எதிர்பார்த்த பொழுது முதல் செட்டின் துவக்கம் முதலே கடுமையான போரட்டத்தினை வெளிப்படுத்தினார் ராம்குமார். டைபிரக்கர் வரை சென்ற இந்த செட்டில் நீண்ட போராட்டத்திற்கு பின் 6(8)-7(10) என்ற கணக்கில் இழந்தார் ராம்குமார். இரண்டாவது செட்டிலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடினார் ராம்குமார். இந்த செட்டும் டைபிரக்கர் வரை சென்றது. நீண்ட கடுமையான போராட்டத்திற்கு பின் முதல் செட்டினை போலவே இந்த செட்டினையும் 6(8)-7(10) என இழந்தார் ராம்குமார். ஆட்டம் முழுவதும் வெகு சிறப்பா ஆடி வந்தாலும் முக்கிய கட்டங்களில் செய்த சிறு தவறேகளால் 6-7, 6-7 என்ற செட் கணக்கில் தோல்வியடைப்தார் ராம்குமார். அவர் செய்த தவறுகளை தனது அனுபவம் மூலமாக தன் வெற்றிக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார் மரின் சிலிச். இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்திருந்தாலும் ராம்குமார் ராமநாதன் விளையாடிய விதம் குறித்து அவர் மட்டுமின்றி அனைத்து ரசிகர்களும் நிச்சயம் பெருமைப்பட வேண்டும்.