உலக டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப்: முதல் முறையாக இந்திய அணி தகுதி

Update: 2020-02-08 12:36 GMT

உலக டிராக் சைக்கிளிங் போட்டிகள் வரும் 26ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. உலகின் சிறந்த 18 அணிகள் போட்டியிடும் இந்த தொடரில் பங்கெடுக்க முதல் முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. மற்றொரு சிறப்பம்சமாக நமது அணியில் இருக்கும் வீரர்கள் அனைவருமே இளைஞர்கள்.

இஸோவ் அல்பென் (19), ஜெம்ஷ் சிங் (19), ரோஜித் சிங் (18), மற்றும் ரொனால்டோ சிங் (18). இதுகுறித்து இந்திய சைக்கிளிங் அணியின் தேசிய பயிற்சியாளர் ஆர்.கே.சர்மா ஸ்போர்ட்ஸ்டார் நாளிதழக்கு பேட்டியளித்துள்ளார். அதில், "இந்த இளைஞர்கள் அணி சீனியர் உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றது மிகப்பெரிய சாதனை ஆகும். அந்த தொடரில் எந்த இடத்தை பிடிப்போம் என்ற கவலை இல்லை.

எங்களின் ஒரே லட்சியம் 2024 ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தகுதி பெறுவது மட்டுமே. அதற்காக நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம் என்பதை இந்த உலக சாம்பியன்ஷிப் தகுதி காட்டுகிறது. மேலும் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள், 2022 முதல் தொடங்கும். அதற்கு முன்னதாகவே கணிசமான தகுதிப்புள்ளிகளை நாங்கள் பெற்றிருப்போம் என நம்புகிறோம் "என்று கூறினார்.

யூசிஐ டிராக் சைக்கிளிங் உலகக்கோப்பை போட்டிகளில், ட்ராக் சைக்கிளிங்ல் உள்ள வெவ்வேறு பிரிவுகளுக்கான போட்டிகள் நடைபெறும். இது யூனியன் சைக்கிளிஸ்டே இன்டர்நேஷனலே அமைப்பால் நடத்தபடுகிறது. இப்போது உள்ள போட்டிகள்: டீம் ஸ்பிரின்ட், மேடிசன், ஓம்னியம், ஸகரட்ச் ரேஸ், டீம் பர்ஷுட்,பாயிண்ட்ஸ் ரேஸ், கெஜ்ரின், டைம் ட்ரையல் மற்றும் இன்டிவிஜுவல் பர்ஷுட்.

இந்த வருடத்தில், 20 போட்டிகள் நடைபெற உள்ளது, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 10 போட்டிகள். டெபரா ஹெரால்ட் தான் உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் ஆவார். 2016ல் பெண்களுக்காண 500 மீட்டர் டைம் ட்ரையல் போட்டிக்கு தகுதிப்பெற்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 2017ல் ஏற்பட்ட காயம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறும் அவரது கனவு சீர்குலைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.