கோவையைச் சேர்ந்தவர் ஜவஹர் கார்த்திகேயன். இவருக்கு நடைப் பயிற்சி மிகவும் பிடித்த பொழுதுபோக்காக இருந்தது. அதனை வைத்து எதாவது சாதனைப் படைக்க வேண்டும் என்ற முன்னைப்புடன் கார்த்திகேயன் இருந்துள்ளார்.
ஒருவர் நடக்கும் போது குறைந் நேரத்தில் 36,000 எட்டுக்கு மேல் வைத்தால் அது ஆசிய சாதனையாக கருதப்படும். இதனால் இந்தச் சாதனையை படைக்க வேண்டும் என்று கார்த்திகேயன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக கோவையிலுள்ள கொடிசியா வளாகத்தை இவர் தேர்வு செய்துள்ளார்.
இந்நிலையில் இன்று கோவை கொடிசியா வளாகத்தில் ஆசிய சாதனையை அங்கிகரிக்கும் அதிகாரிகள் முன்பாக கார்த்திகேயன் இந்தச் சாதனையைச் செய்தார். இதனைப் பார்த்த அதிகாரிகள் ஜவஹர் கார்த்திகேயனுக்கு சாதனைக்கான சான்றிதழை வழங்கினர்.
Tamil Nadu: Jawahar Karthikeyan, from Coimbatore, enters Asian Records Academy of walking highest number of footsteps in 6 hours by an individual in male category.
He says, "In 5 hours I have exceeded the minimum requirement of walking 36,000 footsteps." pic.twitter.com/R6XT3IX5Tc
— ANI (@ANI) December 5, 2020
இந்தச் சாதனை தொடர்பாக கார்த்திகேயன் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு ஒரு பேட்டியளித்துள்ளார். அதில், “நான் மொத்தமாக 6 மணி நேரம் நடந்தேன். எனினும் 5 மணி நேரத்திலேயே 36000 எட்டுக்கு மேல் வைத்து ஆசிய சாதனையை படைத்தேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: அறிமுக டி20 போட்டியில் அசத்திய ‘சின்னப்பம்பட்டி சிங்கம் நடராஜன்’- ட்விட்டரில் பாராட்டிய ரசிகர்கள்