ஜிப்ரால்டர் செஸ் திருவிழா: 4 வெற்றிகளைப் பெற்று பிரக்ஞானந்தா இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம்

Update: 2020-01-26 15:31 GMT

ஐரோப்பியாவின்

ஜிப்ரால்டர் பகுதியில் செஸ்

தொடர் நடைபெற்று வருகிறது.

இந்தத்

தொடரில் மொத்தம் 120

வீரர்கள்

பங்கேற்று உள்ளனர்.

இந்தியாவின்

சார்பில் சசிகரண்,

எஸ்.எல்.சூர்யநாரயணன்,

ரவி

தேஜா,

இளம்

கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா

உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில்

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம்

கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா

தனது நான்காவது வெற்றியைப்

பெற்று வீரர்கள் பட்டியலில்

இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

இந்தத்

தொடரின் முதல் போட்டியில்

பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார்.

பின்னர்

நடைபெற்ற நான்கு போட்டிகளிலும்

அவர் பெற்றுள்ளார்.

இந்நிலையில்

இன்று நடைபெற்ற ஆட்டத்தில்

பிரக்ஞானந்தா சக இந்திய வீரரான

ரவி தேஜாவை எதிர்கொண்டார்.

இதில்

சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தா

ரவி தேஜாவை வீழ்த்தினார்.

இதன்மூலம்

5

சுற்றுகள்

முடிவில் அவர் 4

புள்ளிகள்

பெற்று 11

பேருடன்

இரண்டாவது இடத்தை பகிர்ந்துள்ளார்.

5

சுற்றுகளின்

முடிவில் 4.5

புள்ளிகளுடன்

5

பேர்

முதலிடத்தில் உள்ளனர்.

மேலும்

இந்தத் தொடரில் பங்கேற்றுள்ள

மற்றொரு இளம் வீரரான டி.குகேஷ்

குவையின் ஜோன்ஸ் இடம் 26

நகர்த்தல்களில்

தோல்வி அடைந்தார்.

உலகிலேயே

மிகவும் குறைந்த வயதில்

கிராண்ட் மாஸ்டர் பட்டம்

வென்றவர்கள் பட்டியலில்

டி.குகேஷ்

இரண்டாம் இடத்தில் உள்ளது

குறிப்பிடத்தக்கது.

ஜார்ஜியாவின்

இவான் செப்ரினோவ் 4.5

புள்ளிகளுடன்

முதலிடத்தை 4

வீரர்களுடன்

பகிர்ந்து கொண்டுள்ளார்.

பிரக்ஞானந்தாவுடன்

மற்ற இந்திய வீரர்களான அதிபன்,

சசிகரண்,

சூர்யநாராயணன்

ஆகியோர் 4

புள்ளிகளுடன்

இரண்டாவது இடத்தை பகிர்ந்து

கொண்டுள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த சிறுவன் பிரக்ஞானந்தா. 12 வருடம் 10 மாதம் 13 நாட்களில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்று அசத்தினார். இதன்பின்னர் கடந்த ஆண்டு நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 14 வயது பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். அத்துடன் கடந்த டிசம்பர் மாதம் செஸ் தரவரிசையில் 2600 புள்ளிகளை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் பிரக்ஞானந்தா படைத்தது குறிப்பிடத்தக்கத