பிரீமியர் பேட்மிண்ட்ன் லீக்: முதல் நாள் போட்டியில் சென்னை அணி அசத்தல்

Update: 2020-01-20 19:07 GMT

பிரீமியர் பேட்மிண்டன் லீக் ஐந்தாவது சீசன் சென்னையில் இன்று தொடங்கியது. ஜவர்ஹர்லால் நேரு மைதானத்தில் தொடங்கிய முதல் நாள் ஆட்டத்தில், சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் - ஹைதராபாத் ஹன்டர்ஸ் அணிகள் மோதின. இதில் சென்னை அணி அசத்தல் வெற்றி பெற்றது.

பேட்மிண்டன் கலப்பு பிரிவு போட்டியில், சென்னையின் ரங்கி ரெட்டி - ஜெஸிக்கா

புஹ் ஜோடி ஹைதராபாத்தின் சிக்கி ரெட்டி - வ்லாடமிர் இவனோ ஜோடியை 15-6, 13-15, 15-13 என்ற புள்ளி கணக்கில்

வீழ்த்தியது. உள்ளூர் மக்கள் சென்னை அணிக்கு உற்சாகமாக ஊக்கமளிக்க, அடுத்தடுத்த

போட்டிகளை சென்னை அணி வென்றது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில், 15-11, 15-10 என்ற புள்ளி கணக்கில் ஹைதராபாத்தின் சவுரப் வெர்மாவை தோற்கடித்தார் சென்னை அணியின் டாமி சுகியார்டோ.

Image: PBL

ஹைதராபாத்தின் ப்ரியன்ஷூ ராஜாவாட், சென்னையின் லக்‌ஷயா சென் மோதிய அடுத்த

போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. முதல் செட்டில் லக்‌ஷயா ஆதிக்கம், அடுத்த

செட்டில் அதிரடியாக விளையாடினார் ராஜ்வாட். இரண்டு பேரும் மாறி மாறி புள்ளிகளை

எடுக்க, இந்த போட்டி நீண்ட நேரம் நடைபெற்றது.

இறுதியில், 15-8, 13-15, 15-14 என்ற புள்ளி கணக்கில் லக்‌ஷயா சென் போட்டியை வென்று சென்னை அணிக்கு முன்னிலையை பெற்று தந்தார்.

சிந்து vs காயத்ரி

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முதல் நாள் போட்டியில், முன்னணி வீராங்கனை பி.வி சிந்து, இளம் வீராங்கனை காயத்ரி கோபிசந்த் மோதினர். பிரபல பேட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்தின் மகள்தான் இந்த காயத்ரி கோபிசந்த். இந்த போட்டியில், 5-15, 5-15 என்ற புள்ளி கணக்கில் சிந்து வென்று ஹைதராபாத்தின் வெற்றி கணக்கைத் திறந்து வைத்தார்.

Image: PBL

இறுதியாக நடைபெற்ற ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு போட்டியில், சென்னை அணிக்காக

ராங்கிரெட்டி, பி.எஸ் ரெட்டி - ஹைதராபாத்துக்காக லேன், வெண்டி ஆகியோர் மோதினர்.

முதலில் ஆதிக்கம் செலுத்திய சென்னை அணியை, இரண்டாவது செட்டில் ஹைதராபாத்

வென்றது. எனினும், கடைசி செட்டில் தீவிரமாக விளையாடிய சென்னை அணியினர் 15-14,

11-15, 15-8 என்ற புள்ளி கணக்கில் போட்டியை வென்றது.