'அஸ்வினும் சென்னையும்'- 2012க்கு பிறகு சென்னை டெஸ்டில் நடந்த அதே நிகழ்வு!

Update: 2021-02-08 10:55 GMT

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை இங்கிலாந்து தொடங்கியது.

இரண்டாவது இன்னிங்ஸில் இரு முனையிலும் இந்திய அணி சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து தொடங்கியது. 9ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னை டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸை இரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 61 ரன்கள் விட்டு கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

முன்னதாக 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் மற்றும் ஹர்பஜன் சிங் பந்துவீச்சை தொடங்கினர். அந்தப் போட்டியிலும் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 95 ரன்கள் விட்டு கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். தற்போது மீண்டும் சென்னையில் இன்னிங்ஸை தொடங்கி 5 விக்கெட்டிற்கு மேல் எடுத்து அஸ்வின் சாதனைப் படைத்துள்ளார்.

மேலும் படிக்க: 22 ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை டெஸ்ட் தோல்விக்கு கும்ப்ளே கொடுத்த சாதனை பதிலடி- ரீவைண்ட்