தனது பிறந்தநாளில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள யுவராஜ் சிங்!

Update: 2020-12-12 07:29 GMT

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் யுவராஜ் சிங் என்ற பெயர் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டே இருக்கும். தனது அசத்தலான ஆட்டத்தின் மூலம் பல கோடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இன்று பிறந்தநாள் காணும் இவர், தனது பிறந்தநாளை கொண்டாடுவதை விட டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு விரைவாக தீர்மானம் கிடைப்பதே சிறப்பாக இருக்கும் என தனது சமுக வலைதளங்களில் கூறியுள்ளார். மேலும் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக விளையாட்டு வீரர்கள் தங்களது விருதுகளை திருப்பி கொடுப்பது தொடர்பான கருத்துக்களை தனது தந்தை கூறியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், " விவசாயிகளே இந்த நாட்டின் உயிர் நாடி. அவர்களது பிரச்சினைகளுக்கு அமைதியான பேச்சு வார்த்தை மூலம் தீர்வு கிடைக்க வேண்டும். பிறந்தநாள் என்பது ஒருவரின் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நாளாகும்.இன்னாளில் இந்த அனைத்து பிரச்சனைகளும் விரைந்து தீர்வு காண நான் வேண்டி கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார். மேலும், "இதுகுறித்து திரு.யோக்ராஜ் சிங் கூறிய கருத்துக்கள் வருத்தமளிக்கிறது. இது முற்றிலும் அவரது சொந்த வார்த்தைகள். எந்த வகையிலும் என்னை சாராது." எனவும் பதிவிட்டுள்ளார்.

அவரது தந்தையான யோக்ராஜ், விவசாயிகளின் போராட்டம் நியமானது எனவும் அரசாங்கம் அவர்களுது கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் எனவும், விருதுகளை திரும்பி கொடுக்க வீரர்கள் எடுத்த முடிவும் சரியானது என்று முன்னர் கூறியது குறிப்பிடத்தக்கது. முடிவாக யுவராஜ் கோவிட் அச்சுறுத்தல் இன்னும் முடியவில்லை எனவும் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனக் கூறி முடித்துள்ளார்.

மேலும் படிக்க: ‘விவசாயத்தாலே தான் நாங்கள் முன்னேறினோம்’- அர்ஜுனா, பத்மஸ்ரீ விருதுகளை திருப்பி தரும் வீரர்கள்