2020 டோக்கியோ ஒலிம்பிக் நடை போட்டி 20 கி.மீ பிரிவுக்கு தகுதிபெற்றார் இந்தியாவின் பாவனா ஜாட்

Update: 2020-02-15 08:11 GMT

இந்திய தேசிய நடை போட்டி சாம்பியின்ஷிப்பில், 20 கி.மீ பிரிவில் புதிய தேசிய சாதனை டைமிங்கை செய்து 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுளார் பாவனை ஜாட். ராஜஸ்தானை சேர்ந்த 24 நான்கு வயதான பாவனா, இந்த சாதனையை 1 மணிநேரம் 29 நிமிடங்கள் மற்றும் 54 நொடிகளில் முடித்து ஏழாவது தேசிய நடை போட்டி சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் தகுதி நேரமான 1:31.0 இலக்கையும் கடந்தார். இதற்கு முன்னதாக அவரது சிறந்த டைமிங் 1:38.30 ஆக இருந்துள்ளது.

மற்றொரு வீரரான பிரியங்கா கோசுவாமி ஒலிம்பிக் போட்டிக்கு தேவையான நேரத்தை வெறும் 36 நொடிகளினால் தவறவிட்டளார். அவர் 1:31.36 என்ற நேரத்தில் இந்த போட்டியை முடித்துள்ளார். ஆண்களுக்கான போட்டியில், 1:21.34 என்ற நேரத்தில் முடித்து பட்டம் வென்றார் சந்தீப் குமார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறும் நேரத்தை வெறும் 34 நொடிகளிள் தவறவிட்டார். இவர் அடுத்த மாதம் ஜப்பானில் நடக்க இருக்கும் ஆசிய நடை போட்டி சாம்பியன்ஷிப்பில் சிறப்பாக பெஃர்மாம் செய்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற முயற்சிப்பார்.

இதற்கு முன்னதாக, கடந்த வருடம் மார்ச்சில் ஜப்பானில் நடந்த ஆசிய நடை போட்டி சாம்பியன்ஷிப்பில் 20 கி.மீ பிரிவில் நான்காவது இடத்தில் முடித்ததுன் மூலம் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் தடகள பிரிவுக்கு தகுதிபெற்ற முதல் இந்தியர் ஆனார் கே.டி. இர்பான்.