ஜுவாலா குட்டாவுடன் நிச்சயதார்த்தம் செய்த நடிகர் விஷ்ணு விஷால்

Update: 2020-09-07 16:08 GMT

இந்திய பேட்மிண்டன் உலகில் இரட்டையர் பிரிவில் சிறப்பான வீராங்கனை ஜுவாலா குட்டா. இவர் தற்போது போட்டிகளில் பங்கேற்பதில்லை. இவர் சில மாதங்களாக தமிழ் திரைப்பட நடிகர் விஷ்ணு விஷாலுடன் காதல் வயப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில் தற்போது அந்த தகவலை உறுதிப்படுத்து விதமாக இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக ஜுவாலா குட்டா மற்றும் விஷ்ணு விஷால் ஆகிய இருவரும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

ஜுவாலா குட்டாவின் பிறந்தநாளான இன்று இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. விஷ்ணு விஷால் திரைப்படத்திற்கு வருவதற்கு முன்பு கிரிக்கெட் வீரராக இருந்தவர். இவருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு ரஜினி நடராஜன் என்பவரிடமிருந்து விவாகரத்தானது. இந்த தம்பதிக்கு ஆரியான் என்ற சிறிய மகன் இருந்தது.

அதேபோல ஜுவாலா குட்டாவும் முன்னாள் பேட்மிண்டன் வீரர் சேத்தன் ஆனந்திடமிருந்து விவாகரத்து பெற்றவர். ஜுவாலாவும் விஷ்ணுவும் கடந்த சில மாதங்களாக இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்தச் சூழலில் தற்போது இருவரும் தங்கள் காதலை வெளிப்படையாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: அஞ்சு பாபி ஜார்ஜிற்கு சொந்த ஊரில் கிடைத்த புதிய அங்கீகாரம்!