“பதக்க வீரர்களுக்கு, வாழ்நாள் ஓய்வூதியம்” விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு

Update: 2020-02-11 06:46 GMT

சர்வதேச அளவில் பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு விளையாட்டுக்கான

வாழ்நாள் ஓய்வூதியம் பெறலாம் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு

தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். ஒலிம்பிக் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள், ஆசிய விளையாட்டு, உலக கோப்பை, மாற்று திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டு ஆகிய போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு 30 வயது நிறைவடைந்தவுடன் அல்லது விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்த ஓய்வூதியம் அவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்

மேலும், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இதுவரை

627 விளையாட்டு வீரர் வீராங்கனைகள் மாத ஓய்வூதியமாக 12,000 ரூபாய் முதல் 20,000

ரூபாய் வரை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதே போல, வறுமையில் வாழும் முன்னாள் விளையாட்டு வீரர் வீராங்கனைகளின்

நலனுக்காக ‘பண்டிட் தீண்டயல் உபாத்யாய் தேசிய நல நிதி திட்டம்’ குறித்து ஆலோசனை

நடத்தி வருவதாகவும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துளார்.

“இந்த திட்டம் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கும் சமமாக

பொருந்தும்” என அவர் தெரிவித்தார்.