விஜய் நடித்த தெலுங்கு ரீமேக் ஸ்போர்ட்ஸ் படத்தின் கதை கரு எங்கிருந்து உருவானது தெரியுமா?

Update: 2021-01-22 09:21 GMT

2003ஆம் ஆண்டு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘ஒக்கடு’. இந்தப் படத்தை குணசேகர் இயக்கியிருந்தார். இந்தப் படம் தமிழில் ‘கில்லி’ என்ற பெயருடன் ரீமேக் செய்யப்பட்டது. இதில் நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா நடித்தனர். இப்படம் தமிழில் பெரிய ஹிட்டானது.

இந்தச் சூழலில் இந்தப் படத்தின் தெலுங்கு இயக்குநர் குணசேகரன் படத்தின் கதை எப்படி உருவானது என்று தெரிவித்துள்ளார். அதாவது அவர் ஒரு சமயம் பேட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த் அளித்த நேர்காணலை பார்த்துள்ளார். அதில் கோபிசந்த் தனது தந்தையின் விருப்பத்திற்கு மாறாக பேட்மிண்டன் விளையாட்டில் பங்கேற்று சாதித்தார் என்பது பற்றி கூறியுள்ளார்.

இதனைப் பார்த்து வியந்து போன குணசேகரன் தந்தைக்கு பிடிக்காத விளையாட்டில் மகன் பங்கேற்று சாதிக்கும் வகையில் ஒரு கதை எழுதினார். அதனால் தான் இந்தப் படத்தில் தந்தைக்கு பிடிக்காத கபடி விளையாட்டில் கதாநாயகன் பங்கேற்று வெற்றிப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் தெலுங்கு மற்றும் தமிழில் பெரியளவில் ஹிட்டானது. குறிப்பாக தமிழில் விஜய் ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. விஜய் ரசிகர்கள் இந்தப் படத்தை மிகவும் கொண்டாடினர். இந்தப் படத்தின் கதை உருவாகுவதற்கு பேட்மிண்டன் வீரரும் பயிற்சியாளருமான கோபிசந்த் தான் காரணம் என்பது பெரிய ஆச்சரியமாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க: ஜல்லிக்கட்டு டூ வழுக்கு மரம் ஏறுதல் – தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்