மகளிர் டி-20 உலகக் கோப்பை பற்றி சிவகார்த்திகேயன் சொல்வது என்ன? - வீடியோ

Update: 2020-02-17 15:30 GMT

மகளிருக்கான கிரிக்கெட் டி-20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது. பிப்ரவரி 21-ம் தேதி தொடங்கும் இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

ஆண்களுக்கான கிரிக்கெட்டுக்கு இருக்கும் பிரபலத்தை ஒப்பிடும்போது பெண்கள் கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் குறைவே. ஆனால், ஆண்கள் கிரிக்கெட்டுக்கு நிகரான சுவாரஸ்யமும், ஆட்ட நுணுக்கங்களும், சிறப்பான விளையாட்டும் பெண்கள் கிரிக்கெட்டிலும் உள்ளது என்பதை மறுக்க முடியாதது.

இந்நிலையில், மகளிர் டி-20 உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்னதாக இத்தொடரை மக்களிடத்தில் பிரபலப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள ஆஸ்திரேலிய தூதரக அதிகாரி ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்தப் பேசியுள்ளார்

https://twitter.com/AusCGChennai/status/1228318229233188865?s=20

#LedByWomen என்ற ஹேஷ்டேக் மூலம் மகளிர் டி-20 உலகக் கோப்பைக்கான சிறப்பு கவுண்டவுன் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சாரத்தில் கலந்து கொண்டுள்ள சிவகார்த்திகேயன் மகளிர் கிரிக்கெட் டி-20

தொடருக்கான தனது சிறப்பு வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்

“இந்த முயற்சியின் ஒரு சிறு அங்கமாக இருப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

எனக்கு பிடித்த விளையாட்டின், அதுவும் பெண்களுக்கான உலகக் கோப்பை தொடங்க இருப்பது

எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. நிஜத்தில் அசத்தும் வீராங்கனைகளை பார்த்தே ‘கனா’

என்றொரு திரைப்படத்தை தயாரித்து வெளியிட முடிவு செய்தோம். பெண்கள் விளையாட்டுகளுக்கு

ஆதரவு தருவது மிகவும் அவசியம். எனவே, ஆஸ்திரேலியாவில் தொடங்க இருக்கும் இத்தொடரில்

விளையாடும் இந்திய அணிக்கு மட்டும் ஆதரவு தராமல், பெண்கள் விளையாட்டுக்கு முழு

ஆதரவு அளித்து கொண்டாடுவோம். இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இறுதிப்போட்டியில்

விளையாட வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.” என்று வீடியோவில் தெரிவித்துள்ளார்