டாட்டா
மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் தொடர் முதல் நாள் போட்டியில் இந்தியாவின் முன்னனி டென்னிஸ்
வீரர்கள் சுமித் நகல், ராம்குமார் ராமநாதன் தோல்வியைத் தழுவினர்.
டாட்டா
மகாராஷ்டிரா ஓபன் டேனிஸ் தொடரின் மூன்றாவது சீசன் நேற்று தொடங்கியது. தெற்கு
ஆசியாவில் நடைபெறும் ஒரே ஏடிபி டென்னிஸ் தொடரான இதில், சர்வதேச டென்னிஸின் முன்னணி
வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்வர்.
இந்த தொடர் முதன் முதலாக 1996ஆம் ஆண்டு தொடங்கியது. முதலில் இத்தொடர் டெல்லியில் நடைபெற்றது. பின்னர் அது சென்னைக்கு மாற்றப்பட்டு சென்னை ஓபன் என்று நடைபெற்றது. அதன்பின்னர் 2018ஆம் ஆண்டு புனேவிற்கு மாற்றப்பட்டு மகாராஷ்டிரா ஓபன் என்ற பெயரை பெற்றது.
நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான
ஒற்றையர் பிரிவு போட்டிகளில் இந்தியாவின் நம்பர் 2 வீரர் சுமித் நகல், செர்பியாவின்
விக்டர் டிராய்கியை எதிர்த்து விளையாடினர். இந்த போட்டியில், 2-6, 7-6, 1-6 என்ற
செட் கணக்கில் போட்டியை இழந்தார். இந்த போட்டியை தோற்றது மூலம், டாட்டா ஓபன்
டென்னிஸ் தொடரில் இருந்து சுமித் நகல் வெளியேறுகிறார்.
இதே போல, மற்றொரு ஆண்கள்
ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் நம்பர் 3 டென்னிஸ் வீரர், தமிழ்நாட்டைச்
சேர்ந்த ராம்குமார் ராமநாதன் விளையாடினர். இந்த போட்டியில், இத்தாலியைச் சேர்ந்த
சால்வட்டோர் கருசோவை எதிர்த்து விளையாடினர். இதில், 3-6, 6-4, 7-5 என்ற செட்
கணக்கில் ராம்குமார் போட்டியை இழந்தார்.
இன்று நடைபெறும் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் டென்னிஸ் நடசத்திரம் லியாண்டர் பயஸ் போட்டியிடுகிறார். இரவு 7.30 மணிக்கு இந்த போட்டியில், இந்தியாவின் பயஸ் - ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் இணை, இந்தியாவின் டிவிஜ் ஷரண் - நியூசிலாந்தின் ஆர்டெம் சிடக் இணையை எதிர்கொள்கிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில்,
இந்தியாவின் பிரஜ்னேஷ் குணசேகரன், ஜெர்மனியின் யன்னிக் மேதனை எதிர்த்து விளையாட
உள்ளார். டாட்டா ஓபன் டென்னிஸ் தொடர் பிப்ரவரி
9-தேதி வரை நடைபெற உள்ளது.