மல்யுத்தம்: ஒலிம்பிக் வாய்ப்பை நெருங்கும் 14 இந்திய வீரர் வீராங்கனைகள் பற்றிய முழு விவரம்

Update: 2020-02-27 17:20 GMT

2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மல்யுத்த விளையாட்டுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் மார்ச் மாத இறுதியில் நடைபெற உள்ளன.

ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகளில் மல்யுத்த விளையாட்டில் பங்கேற்க இருக்கும் இந்திய வீரர் வீராங்கனைகளின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது 14 மல்யுத்த வீரர் வீராங்கனைகள் ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மகளிருக்கான மல்யுத்த போட்டிகளுக்கான ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியில் இந்தியா சார்பில் யார் பங்கேற்க இருக்கிறார்கள் என்ற சந்தேகம் இருந்தது வந்தது. அதற்கான தேர்ச்சி போட்டிகள் இப்போது நடந்து முடிந்துள்ளன. இதில், 18 வயதேயான இளம் வீராங்கனை சோனம் மாலிக் சீனியர் வீராங்கனைகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இந்நிலையில், ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகளுக்கு தேர்ச்சி பெற்றிருக்கும் இந்திய வீராங்கனைகள்

  • 57 கிலோ எடைப்பிரிவு - நிர்மலா தேவி
  • 57 கிலோ எடைப்பிரிவு - அன்ஷூ
  • 62 கிலோ எடைப்பிரிவு - சோனம் மாலிக்
  • 68 கிலோ எடைப்பிரிவு - திவ்யா காக்ரன்
  • 76 கிலோ எடைப்பிரிவு - கிரண்

ஆண்களுக்கான கிரேக்கோ - ரோமன் ஸ்டைல் மல்யுத்த போட்டிகளுக்கு தேர்ச்சி பெற்றிருக்கும் இந்திய வீரர்கள்

  • 60 கிலோ எடைப்பிரிவு - ஞானேந்தர்
  • 67 கிலோ எடைப்பிரிவு - அஷூ
  • 77 கிலோ எடைப்பிரிவு - சஜன்
  • 87 கிலோ எடைப்பிரிவு - சுனில் குமார்
  • 97 கிலோ எடைப்பிரிவு - ஹர்தீப்
  • 130 கிலோ எடைப்பிரிவு - நவீன்

ஆண்களுக்கான ஃபிரீஸ்டைல் மல்யுத்த போட்டிகளுக்கு தேர்ச்சி பெற்றிருக்கும் இந்திய வீரர்கள்

  • 74 கிலோ எடைப்பிரிவு - ஜிதேந்தர்
  • 97 கிலோ எடைப்பிரிவு - சத்யவார்ட் காடியன்
  • 125 கிலோ எடைப்பிரிவு - சுமித்

இந்த வீரர் வீராங்கனைகளை தவிர்த்து ஏற்கனவே இந்தியாவில் இருந்து நான்கு பேர் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில், வினேஷ் போகட் 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பதை உறுதி செய்த முதல் இந்திய வீராங்கனை. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற உலக மல்யுத்த தொடரில் முன்னணி வீராங்கனை சாரவை தோற்கடித்த வினேஷ், 2020 ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க தேர்ச்சி பெற்றார். ஆனால், உலக மல்யுத்த தொடரில் வினேஷ் போகத்துக்கு வெண்கலப் பதக்கமே கிடைத்தது.

அவரைப் போலவே, உலக மல்யுத்த தொடர் ஆண்களுக்கான பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பஜரங் பூனியா, 2020 ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பதை உறுதி செய்தார்.

ஆண்களுக்கான 57 கிலோ எடை பிரிவில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்ற ரவி குமார் தாஹியாவும் ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சிப்பெற்றுள்ளார்.

மேலும், உலக ஜூனியர் மல்யுத்த தொடரில் ஆண்களுக்கான 86 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இருபது வயதேயான தீபக் பூனியா 2020 ஒலிம்பிக் தொடருக்கு தகுதிப்பெற்றுள்ளார்.