ஐசிசி டி20 மகளிர் உலகக்கோப்பை 2018 -ரீவைண்ட்

Update: 2020-02-14 14:36 GMT

ஐசிசி டி20 மகளிர் உலகக்கோப்பையின் ஆறாவது தொடர் 2018 நவம்பர் 9 முதல் 24 வரை வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றது. இது 2010ஆம் ஆண்டிற்கு பிறகு இரண்டாவது முறையாக வெஸ்ட் இண்டீஸ் நடத்தும் உலகக் கோப்பை தொடராகும். இந்த தொடரில் அவர்கள் தான் நடப்பு சாம்பியன்கள் என்பது மற்றொரு சிறப்பம்சமாகும்.

மொத்தமாக 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், இங்கிலாந்தும், ஶ்ரீலங்காவும் செய்ன்ட் லூசியாவில் மோதிவிருந்த முதல் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. இதன்பின்னர் நடைபெற்ற லீக் ஆட்டங்களின் முடிவில் முதல் குரூபிலிருந்து, போட்டியை நடத்தும் வெஸ்ட் இண்டீஸும், இங்கிலாந்தும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இரண்டாவது குரூபிலிருந்து மூன்று முறை கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் அரையிறுதிக்கு தகுதிபெற்றனர்.

முதல் அரையிறுதியில் நடப்புச் சாம்பியனான வெஸ்ட் இன்டீஸை எதிர்கொண்டார்கள் முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியா. முதலில் பேட் செய்த அவர்கள் 20 ஓவர்களின் முடிவில் 142 ரன்கள் குவித்திருந்தார்கள். அதிகபட்சமாக அலீஸா ஹீலீ 46 ரன்கள் அடித்திருந்தார். இரண்டாவதாக ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து ஆட்டத்தின் முடிவில் வெறும் 71 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஆட்டத்தின் சிறந்த வீரர் விருது அலீஸா ஹீலீக்கு வழங்கப்பட்டது.

இரண்டாவது

அரையிறுதியில் இந்தியாவும்

இங்கிலாந்தும் மோதினார்கள்.

காயத்திலிருந்து

முழுவதுமாக குணமடைந்திருந்த

போதிலும் நட்சத்திர ஆட்டக்காரர்

மித்தாலி ராஜை அணியில்

சேர்க்காதது பெரும் அதிர்ச்சியை

ஏற்படுத்தியது.

அந்த

முடிவு தவறு என்பதற்கு

எடுத்துக்காட்டக முதலில்

ஆடிய இந்திய அணியினால் 112

ரன்களை

மட்டுமே எடுக்க முடிந்தது.

பின்னர்

ஆடிய இங்கிலாந்து அணி சுலபமாக

அந்த இலக்கினை எட்டி

இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

அந்த

அணியின் ஏமி ஜோன்ஸ் ஆட்டத்தின்

சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டார்.

அரையிறுதியில்

அபார பேட்டிங் செய்து அசத்திய

இங்கிலாந்து அணியினால்

இறுதிப்போட்டியில் பெரிதாக

சோபிக்க முடியவில்லை.

ஆஸ்லே கார்ட்னரின் அபார பந்துவீச்சினால்

வெறும் 105 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.

இந்த இலக்கினை எந்தவித கடினமும் இன்றி எட்டி நான்காவது முறையாக

உலக சாம்பியன்கள் ஆனர்கள் ஆஸ்திரேலிய அணியினர்.

பெளலிங்கில் அசத்திய கார்ட்னர் பேட்டிங்கிலும் தனது பங்களிப்பினை கொடுத்து ஆட்டத்தின் சிறந்த வீரர் விருதினை தட்டிச்சென்றார்.

எங்கள்

வாழ்க்கையில் இதுதான் மிகவும்

திருப்திகரமான வெற்றி என்றும்,

இதை

வெகுவாக கொண்டாடுவோம் என்றும்

கூறினார் ஆஸ்திரேலிய கேப்டன்

மெக் லேன்னிங்.

இங்கிலாந்து

கேப்டன் ஹீதர் நைட் கூறுகையில்

கோப்பையை வெல்லாதது

வருத்தமளித்தாலும்,

இறுதிப்போட்டிக்கு

முன்னேறியது மகழ்ச்சி

எனக்கூறினார்.

ஆஸ்திரேலியாவின்

அலீஸா ஹீலீ இந்த தொடரின்

சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த

தொடரின் முத்தாய்ப்பாக

ஆஸ்திரேலியாவிற்காக டி20

போட்டிகளில்

முதல் முறையாக 100

வீக்கெட்டுகளை

வீழ்த்திய சாதனையை செய்தார்

எலிஸ் பெர்ரி.