"டி-20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் பேட்டிங் முன்னேற்றம் காணும்" - ஸ்மிரிதி

Update: 2020-02-15 15:57 GMT

மகளிருக்கான டி-20 உலகக் கோப்பை அடுத்த வாரம் ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது.

உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன், பத்திரிக்கையாளர்களை சந்தித்த இந்திய அணியின்

நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தானா, இந்திய அணியின் பேட்டிங் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்

சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் குவித்திருந்தார் ஸ்மிரிதி மந்தானா. இந்திய அணியின் நம்பிக்கை பேட்ஸ்வுமனான இவரை நம்பியே பேட்டிங் லைன்-அப் உள்ளது. ஸ்மிரிதி மந்தானாவை தொடர்ந்து, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ராட்ரிக்ஸ், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்வுமன்களாக உள்ளனர்

எனினும், ஸ்மிரிதி ஆட்டமிழந்துவிட்டால் இந்திய அணியின் பேட்டிங் திணறுகிறது. இது குறித்து பேசிய அவர், “மிடில் ஆர்டர் பேட்ஸ்வுமன்களுக்கு அழுத்தம் தராமல் இருக்க, மொத்த 20 ஓவர்களையும் டாப் ஆர்டர் விளையாட வேண்டும். டாப் ஆர்டரில் உள்ள நான்கு பேட்ஸ்வுமன்களும் முடிந்த வரை விளையாடினால், மிடில் ஆர்டருக்கு அழுத்தம் தருவதை தவிர்க்கலாம். நிச்சயமாக, இந்திய அணியின் மிடில் ஓவர் முன்னேற்றம் அடையும். அணியின் பேட்டிங் ஆர்டரை மெறுகேற்ற திட்டமிட்டுள்ளோம். விரைவில், சிறப்பான பேட்டிங் லைன்-அப்பை அமைத்திடுவோம்” என்ற நம்பிக்கை தெரிவித்துள்ளார்

2017 டி-20 உலகக் கோப்பை அரை இறுதி போட்டியில்,மிடில் ஆர்டர் சொதப்பியதால்

இந்திய அணி போட்டியை இழந்தது குறிப்பிடத்தக்கது.

இதே போல, முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 15-வது ஓவரில் ஸ்மிரிதி மந்தானா ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து, அடுத்த 12 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. இதனால், இந்திய அணி அந்த போட்டியை இழந்தது. இந்த உலகக் கோப்பையில் அந்த தவறு நடக்காது என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

டி-20 உலகக் கோப்பை முதல் போட்டியில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள்

மோதுகின்றன.