மகளிர் டி-20 உலகக் கோப்பை - ‘நோ பால்’ தொழில்நுட்பம் பயன்படுத்த ஐசிசி தயார்

Update: 2020-02-11 12:57 GMT

மகளிருக்கான சர்வதேச டி-20 உலகக் கோப்பை தொடர் வரும் பிப்ரவரி 21-ம் தேதி

ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது. பிப்ரவரி மாதம் தொடங்கும் இத்தொடர் மார்ச் 8-ம்

தேதி வரை நடைபெற உள்ளது

இந்நிலையில், ஃப்ரண்ட் ஃபூட் நோ பால் தொழில்நுட்பத்தை முதல் முறையாக மகளிருக்கான சர்வதேச கிரிக்கெட்டில் பயன்படுத்த தயாராக உள்ளது ஐசிசி. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், போட்டியின் ஒவ்வொரு பந்தும் தொலைக்காட்சி நடுவரால் கவனிக்கப்படும். அதாவது, பவுலர் வீசும் ஒவ்வொரு பந்தையும் தொலைக்காட்சி நடுவர் கண்கானித்து கள நடுவருக்கு தகவல் சொல்லுவார்.

தற்போது, டி.ஆர்.எஸ் எனப்படும் டெசிஷன் ரிவ்யூ சிஸ்டம் முறை வழியே மூன்றாவது நடுவரால் நோ - பால் சரிபார்த்து சொல்லப்படுகிறது. ஆனால், மகளிரி டி-20 உலகக் கோப்பையில் இதற்கான தேவை இருக்காது என தெரிகிறது.

“நோ பால்களை கவனித்து சொல்வது சிரமமான காரியம் இல்லை. ஒவ்வொரு போட்டியிலும் நோ பால்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தாலும், அவற்றை சரியாக கவனிக்க வேண்டியது அவசியம். 2016-ம் ஆண்டு இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் இந்த முறையை சோதனை செய்தோம். அது பல மடங்கு உதவியாக அமைந்தது” என ஐசிசி பொது மேலாளர் ஜியோஃப் அலார்டிஸ் தெரிவித்துள்ளார்