திங்கட்கிழமை, ஜனவரி 18, 2021
Home அண்மை செய்திகள் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: 3 தங்கப்பதக்கங்களை அள்ளிய இந்திய வீராங்கனைகள்

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: 3 தங்கப்பதக்கங்களை அள்ளிய இந்திய வீராங்கனைகள்

2020 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 3 தங்கப்பதக்கங்கள் மட்டுமில்லாது, இந்தியாவுக்கு இன்று ஒரு வெள்ளிப்பதக்கமும் கைக்கூடியது.

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் டில்லியில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான இன்று 3 தங்கப்பதக்கங்களை இந்திய வீராங்கனைகள் வென்றுள்ளனர். சரிதா மோர் (59 கிலோ), பிங்கி (55 கிலோ), திவ்யா காக்கரன் (68 கிலோ) ஆகியோர் 3 தங்கப்பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்.

கே.டி ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் நடந்த 59 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில், மங்கோலியாவின் பாட்செட்செக் அட்லாண்ட்செட்செக்கை எதிர்த்து விளையாடிய சரிதா 3-2 என்ற கணக்கில் போட்டியை வென்றார்

55 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில், 2-1 என்ற புள்ளிக்கணக்கில் மங்கோலியாவின் டுல்கம் போலரோமாவை இந்தியாவின் பிங்கி வீழ்த்தினார். இதற்கு முன்பு நடந்த அரை இறுதிப்போட்டியில், கசக்கஸ்தான் வீராங்கனை மரினா சுயேவாவை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிங்கி மல்யுத்தம்

இன்றைய நாளின் முதல் தங்கப்பதக்கத்தை இந்திய வீராங்கனை திவ்யா காக்கரன் வென்றார். ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற சாதனையோடு இறுதிப்போட்டியை வென்றார். 68 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.

திவ்யா காக்கரன் மல்யுத்தம்

இதற்கு முன்பு, 2018 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நவ்ஜீத் கவுர் 65 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றிருந்தார். இதுவே, ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை ஒருவர் வென்ற முதல் தங்கப்பதக்கம் ஆகும்.

3 தங்கப்பதக்கங்கள் மட்டுமில்லாது, இந்தியாவுக்கு இன்று ஒரு வெள்ளிப்பதக்கமும் கைக்கூடியது. மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில், ஜப்பானின் மிஹோ இகரஷியிடம் இந்தியாவின் நிர்மலா தேவி தோல்வியடைந்தார். இதனால், இரண்டாம் இடம் பிடித்த நிர்மலா தேவி வெள்ளிப்பதக்கம் வென்றார். மூன்று தங்கப்பதக்கங்கள், ஒரு வெள்ளி என இன்றைய நாளில் இந்திய வீராங்கனைகள் அசத்தினர்.

‘பொங்கல் டெஸ்ட்’ – 61 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய வரலாற்று சிறப்பு நிகழ்வு!

பண்டிகை நாட்கள் அல்லது அதற்கு அருகிலுள்ள நாட்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றால் அதனை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்கள். அதுவும் கிரிக்கெட் போட்டிகள் என்றால் சொல்லவே வேண்டாம் பலர் பண்டிகை விடுமுறையில் நேரடியாக கிரிக்கெட் பார்க்க ஆசையுடன் செல்வார்கள். இவ்வாறு பண்டிகை விடுமுறைகளை குறிவைத்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது வழக்கம்....