தி பிரிட்ஜ்
கொரோனாவுக்கு பின் அதிக கூட்டத்தைக் கண்ட மைதானம் எது? 5 முக்கிய குறிப்புகள்!
Published on 27th May 2021
ஏப்ரல் மாதம், கோலிங்க்வுட் மற்றும் எஸ்ஸன்டனுக்கு இடையேயான போட்டியில், இதுவரை காணாத அதிக அளவு ரசிகர்களைக் காண முடிந்தது.
மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்ற இப்போட்டியில், 78,113 ரசிகர்கள் வந்திருந்தனர். 100,000 நபர்கள் பிடிக்கும் இடத்தில் 78% பூர்த்தியானது.
132,000 நபர்கள் பிடிக்கும் அகமதாபாதின் நரேந்திர மோடி மைதானத்தைப் பார்க்கும் போது குறைவாக இருந்தாலும் கொரோனா நேரத்தில் எந்த வித ஆபத்துகளும் இல்லாமல் நடந்தது மெல்பர்ன் மைதானத்தில்.
விளையாட்டின் போது பேசிய வர்ணனையாளர் கூறியதாவது, இது போன்ற நிகழ்வு உலக சாதனை என்று தெரிவித்தார்.
அன்ஜாக் நாளில் நடந்த இந்நிகழ்வு, உலகளவில் மைதானத்தில் போட்டிகளை நடத்திவருபவற்கு ஒரு எடுத்துக்காட்டு.