தமிழ்நாட்டைக் கலக்கும் தாய்-மகள் கார் பந்தய இரட்டையர் யார்?
Sowmya Sankaran
Published on 9th May 2021
கதை மற்றும் படங்கள் - redbull.com
கார் பந்தயம் என்றாலே ஒரு சிலிர்ப்பான விஷயம். ஆனால், இந்த தாய் மகள் இரட்டையர், தீப்தி-ஷிவானி ப்ரித்வி, கார் பந்தயத்தில்2018-ஆம் ஆண்டு முதல் கலக்கிக்கொண்டு வருகின்றனர்.
வோக்ஸ்வாகன் போட்டியில் வெற்றிப்பெற்று, இந்தியாவின் முதல் பெண் ரேசர் என்னும் பட்டத்தை ஆசிய ஆட்டோ ஜிம்கானா சாம்பியன்ஷிப் போட்டியில் பெற்றனர். ஷிவானியின் தந்தையும் பிரபலமான கார் ரேசர் (பந்தயர்).
தந்தையை மிஞ்சிய பெண்ணாக மாறியுள்ள ஷிவானி, முதலில் தாவனகிரியிலுள்ள திறந்த வெளி மைதானத்தில் பயிற்சியை தொடங்கினார். எம்பிபிஎஸ் மாணவியான ஷிவானியும், நோயியல் பேராசிரியரான தீப்தியும் அனைத்திலும் சூப்பர் ஜோடி தான்.
தாயின் அன்பும், உணவூட்டும் காட்சிகளும் பிரபலமாகும் நிலையில், 2019-ஆம் ஆண்டின் தெற்கிந்திய பேரணியில், மித்சுபிஷி சீடியா வாகனத்தில் ஒரே பெண் இணையராக பங்கெடுத்து மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக்கில் வெற்றி பெற்றார்.
மகள் ஓட்ட தாய் வழிநடத்த தந்தை அரவணைக்க, குடும்பமாக சரித்திரம் படைக்கின்றனர் இந்த பிரித்வி குடும்பம்.