இந்திய வம்சாவளியை சேர்ந்த அர்ஜன் புல்லார், எம்.எம்.ஏ உலகளவு பட்டத்தை வென்றார்
Sowmya Sankaran
Published on May 16, 2021
இந்திய வம்சாவளியை சேர்ந்த அர்ஜன் புல்லார், பளுதூக்கும் போட்டியான ஒன் சாம்பியன்ஷிப்பில் 5 முறை பட்டம் வென்ற பிரண்டன் வேராவை எதிர்த்து விளையாடி வெற்றிப்பெற்றார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த அர்ஜன் புல்லார், கனடா நாட்டில் சிறு வயதிலேயே மல்யுத்தம் கற்க தொடங்கியது மட்டுமல்லாமல் தேசிய கனடா அணியில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். 2010-ம் ஆண்டு காம்மன்வெல்த் போட்டியிலும் பங்கெடுத்தார்.
2014-ல் எம்.எம்.ஏ-வில் சேர்ந்த அர்ஜன், 2017-ஆம் ஆண்டு யூ.எஃப்.சி 215 போட்டியில் வெற்றிப்பெற்ற முத்ல இந்திய வம்சாவளி வீரரானார்.
2019-ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஒன் சாம்பியன்ஷிப் போட்டியில், மௌரா செரிலியை எதிர்த்து வெற்றிப்பெற்றார். இந்த ஆண்டில் தான் இவர் சிங்கபூரிலுள்ள எம்.எம்.ஏ-வில் இணைந்தார்.
இந்த முறை பிரண்டன் வேராவை எதிர்த்து விளையாடியதில், இரண்டாவது சுற்றிலேயே அதிகாரப்பூர்வமாக வெற்றிப்பெற்றார். ஆக, எம்.எம்.ஏ உலகளவு பட்டத்தையும் வென்றார்.