செவ்வாய்க்கிழமை, ஜனவரி 19, 2021
Home அண்மை செய்திகள் இத்தாலியன் ஓபன்: முதல்நிலை ஜோடியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறிய போபண்ணா இணை

இத்தாலியன் ஓபன்: முதல்நிலை ஜோடியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறிய போபண்ணா இணை

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா பங்கேற்றுள்ளார். இவர் கனடாவின் ஷப்வலோவுடன் இணைந்து விளையாடிகிறார்.

இந்தத் தொடரில் முதல் போட்டியில் போபண்ணா-ஷப்வலோவ் இணை 6-4,6-4 என்ற கணக்கில் கரின்-பேல்லா ஜோடியை தோற்கடித்தது. இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முதல்நிலை ஜோடியான கோலம்பியாவின் ராபர்ட் ஃபரா- ஜூவன் கெபல் ஜோடியை எதிர்த்து போபண்ணா இணை களமிறங்கியது.

இந்தப் போட்டியின் முதல் செட்டில் சிறப்பாக விளையாடிய போபண்ணா ஜோடி 6-3 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது சுற்றில் முதல்நிலை ஜோடி சுதாரித்து கொண்டு விளையாடியது. ஃபரா-கெபல் ஜோடி 6-3 என்ற கணக்கில் இரண்டாவது சுற்றை வென்றது.

இதனால் போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் சுற்று நடத்தப்பட்டது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போபண்ணா ஜோடி 10-5 என்ற கணக்கில் வென்றது. அத்துடன் 6-3,3-6,10-5 என்ற கணக்கில் தொடரின் முதல்நிலை ஜோடியை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

நாளை நடைபெற உள்ள காலிறுதிப் போட்டியில் பிரான்சு நாட்டின் சார்டி-மார்டின் ஜோடியை எதிர்த்து போபண்ணா-ஷப்வலோவ் ஜோடி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: தனது 59ஆவது வயதில் முதல் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்த முதியவர்

ஜல்லிக்கட்டு டூ வழுக்கு மரம் ஏறுதல் – பொங்கலும் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளும் !

தமிழர் பாரம்பரியங்களுடன் மிகவும் ஒன்று இருக்கும் ஒரு பண்டிகை என்றால் அது பொங்கல் தான். உழவர் திருநாளான இன்று தமிழ் மக்கள் அனைவரும் மதபேதமின்றி தங்கள் வீட்டுகளில் பொங்கல் வைத்து மகிழ்வார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த பொங்கல் பண்டிகையின் போது உழவர்கள் தங்களின் அறுவடைக்கு பிறகு விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்று மகிழ்வார்கள். இதற்காக நமது தமிழ் பண்பாட்டில் பல பாரம்பரிய விளையாட்டுகள் உள்ளன....